கோமாவில் சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்...என்ன நடந்தது ?

சென்னை : சினிமா, சின்னத்திரை நடிகர், டைரக்டர், டப்பிங் கலைஞர் என பல திறமைகளைக் கொண்டவர் நடிகர் வேணுஅரவிந்த். இவர் தற்போது மருத்துவமனையில் கோமாவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அலைபாயுதே, நரசிம்மா, வல்லவன், வேகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த வேணு அரவிந்த், ஏராளமான பிரபலமான டிவி சீரியல்களில் நடித்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

Tv actor Venu Arvind is admitted in hospital at Coma condition

வாழ்க்கை, அலைகள், அக்னி சாட்சி, ஜனனி, சிவமயம், ராதிகா நடித்த செல்வி, அரசி, வாணி ராணி, சந்திரகுமாரி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். இவர் சபாஷ் சரியான போட்டி என்ற படத்தையும் இயக்கி உள்ளார். மே மாதம் படத்தில் ஹீரோ வினீத்திற்கு டப்பிங் குரல் கொடுத்தவர் இவர் தான்.

கொரோனா பாதிப்பிற்கு பிறகு இவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு மூளையில் கட்டி இருந்ததாக கூறி சர்ஜரி செய்து அகற்றி உள்ளனர். அதன் பிறகு கோமாவிற்கு சென்று விட்டாராம். தற்போது கோமாவில் இருக்கும் வேணு அரவிந்த்திற்கு சென்னையில் மருத்துவமனை ஒன்றில் ஐசியு.,வில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறதாம்.

Tv actor Venu Arvind is admitted in hospital at Coma condition

சின்னத்திரை வட்டாரத்தில் பக்கா ஜென்டில்மேன் என பெயர் வாங்கியவர் வேணு அரவிந்த். குறிப்பாக கிசுகிசுக்கள் எதிலும் சிக்காதவர். இவர் விரைவில் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X