»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரை டிவி தொடக்க விழாவை தொகுத்து
வழங்கிய நடிகை சுஹாசினி
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இணைந்து ஆரம்பித்துள்ள தமிழ்த் திரை டிவியை மத்திய தொலைத்தொடர்புத்துறை இணை அமைச்சர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.

டி.வியின் சின்னத்தை அவர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில்,

முன்பெல்லாம் ஆண்டுக்கு 300 படங்களுக்கு மேல் தமிழில் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது 150படங்களாக சுருங்கிவிட்டது. விசிடிக்களின் பெருக்கமே இதற்கு முக்கியக் காரணம். தமிழ் திரை டிவி போன்றமுயற்சிகளின் மூலம் இந்த பிரச்சினைக்கு டிவு கட்ட இயலும் என்றார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.ஆனால், நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், செயலாளர் சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், நடிகையர்விழாவில் கலந்துகொள்ளவில்லை.

நடிகைகள் மனோரமா, ரோஜா, குஷ்பு, சுஹாசினி, விந்தியா போன்றவர்கள் தான் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்விந்தியாவின் குஜால் ஆட்டமும் இடம் பெற்றது.


குத்து விளக்கேற்றிய நடிகைகள் குஷ்பு, ரோஜா, மனோரமா

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த டிவி 37 நாடுகளில் ஒளிபரப்பாகும். ஆண்டுக்கு 100 புதிய படங்களை இதில்திரையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. படம் எடுத்து தியேட்டர்களில் தோல்வியடைந்தால் அதை தனியார்டிவிக்களுக்கு சில லட்சங்களுக்கு விற்று வந்த தயாரிப்பாளர்கள் இனி அந்தப் படங்களை இந்தத் டிவியில் காட்டிவிளம்பர வருமானத்தில் முக்கால்வாசியைப் பெற முடியும்.

நிகழ்ச்சியில் விந்தியாவின் நடனம்
இதனால் தனியார் டிவிக்களுக்குப் போன வருமானம், இனி இந்த டிவிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வந்து சேரும்.படம் எடுத்து நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை இந்தத் டிவிக்கு விற்பதால் கூடுதல் பணம்கிடைக்கும்.

மேலும் புதிய படங்களில் பாடல் காட்சிகள், டிரைலர்கள் போன்றவை முதலில் இந்த டிவியில் தான் காட்டப்படும்.பின்னர் தான் பிற தனியார் தொலைக்காட்சிகளுக்கு விற்கப்படும். இதனால் மற்ற தொலைக்காட்சிகளைவேகமாகவே இந்த டிவியால் ஓரம் கட்டிவிட முடியும் என்று நம்பப்படுகிறது.

  • தமிழ் திரை டிவி: 37 நாடுகளில் தெரியும்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil