TVK Maanadu: செவல தாவுடா தாவு.. தடுப்புகளை தாண்டும் பாடிசோடாக்களை மடக்க விஜய் போட்ட பக்கா பிளான்!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு தொடர்பான செய்திகள் இணையம் முழுவதும் நிரம்பி வழிகிறது. இப்படி இருக்கும்போது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அக்கட்சி நிர்வாகமே மேற்கொண்டு வருகிறது, அதில் ஒன்றுதான் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களுக்கு கிரீஸ் பூசுவது என்பது. ஏற்கனவே முதல் மாநாட்டில் மின் கம்பங்கள் மீது தொண்டர்கள் ஏறிக் கொண்டு, இறங்க மாட்டேன் என்று அலப்பறை செய்ததால், இந்த முறை இப்படி ஒரு திட்டத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கையில் எடுத்துள்ளார்கள்.
விஜய் மீது அரசியல் களத்தில் வரவேற்பு, எதிர்ப்பு என பலதரப்பட்ட விமர்சனங்கங்கள் இருந்தாலும், விஜய் ரசிகர்களாக இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்காக விஜய் தண்டம் கட்டியே ஒரு வழி ஆகிவிடுவார் என்பதற்கு கடந்த காலங்களில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த விஜய் திட்டமிட்டு இருந்தாலும், ரசிகர்களின் அலப்பறையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதனாலே அரசியல் தளத்தில் விஜய் ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகள் என விமர்சிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள்.

விஜய்க்கு அவப்பெயர்: கடந்த மாநாட்டிலேயே ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்து, சேதப்படுத்தினர். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரிகார்டுகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தினர். முதல் மாநாட்டில் பிளாஸ்டிக் சேர்கள் உடைக்கப்பட்டதால், இந்த மாநாட்டிற்கு பிளாஸ்டிக் சேர்களை வாடகைக்கு தரமாட்டோம் என நான்கு ஒப்பந்ததாரர்கள் மறுத்துவிட்டார்கள். தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் இது போன்ற ஒழுங்கீனமாக செயல்களால் விஜய்க்குத்தான் அவப்பெயர் ஏற்பட்டுக் கொண்டே உள்ளது.
கிரீஸ் தடவும் பணிகள்: சென்னை சம்பவத்தில் கூட மாநகராட்சிக்கு விஜய் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி இருந்தார். இப்படி இருக்கும்போது, இந்த மாநாட்டில், முதல் மாநாட்டைப் போல எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக, மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் அனைத்திலும் கிரீஸ் பூசும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் மின் கம்பங்கள் மீது ஏறி அலப்பறை செய்பவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்படும். இந்த விவரத்தை கேள்விப் பட்டவர்கள், விஜய்யையும், மாநாட்டு ஏற்பாட்டாளர்களையும் பாராட்டி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











