»   »  பொறுப்பில்லாமல் பேசிய சூப்பர் ஸ்டார் மனைவி: கொந்தளித்த மக்கள்

பொறுப்பில்லாமல் பேசிய சூப்பர் ஸ்டார் மனைவி: கொந்தளித்த மக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பொறுப்பில்லாமல் கருத்து தெரிவித்த நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

மும்பையில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். இதையடுத்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மும்பை மாநகராட்சி இடித்து வருகிறது.

இது குறித்து பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினியிடம் கருத்து கேட்கப்பட்டது.

மக்கள் தொகை

மக்கள் தொகை

மக்கள் தொகை அதிகமாகிவிட்டது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு நகரிலும் இத்தனை பேர் தான் வசிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்க வேண்டும். அந்த எண்ணிக்கையை தாண்டிவிட்டால் அவர்களை வேறு நகருக்கு அனுப்ப வேண்டும் என்றார் ஹேமமாலினி.

கொந்தளிப்பு

மும்பை தீ விபத்து குறித்து ஹேமமாலினி தெரிவித்துள்ள கருத்தை கேட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஹேமாவை விளாசித் தள்ளியுள்ளனர்.

மவுனம்

ஒரு எம்.பி.க்கு என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தெரியாவிட்டால் அமைதியாக இருப்பது நல்லது. ஹேமமாலினியின் சர்ச்சை கருத்து பற்றி கூறுகிறேன் என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

தெரியாது

அவர் ஒரு ஜீனியஸ் என்பது தெரியாமல் போய்விட்டது

வெளியேற்றம்

தயவு செய்து அவரை மும்பையை விட்டு வெளியேற்றவும் என ஒருவர் கடுப்பில் ட்வீட்டியுள்ளார்.

English summary
Actress cum BJP MP Hema malini's irresponsible comment about Kamal Mills fire accident has irked the people. Tweeples blast the dream girl for her insensitivity. Some even asked her to leave Mumbai right now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X