»   »  கணவர் கடுப்பானாலும் மகளை கட்டப்பா என்று அழைக்கும் சூப்பர் ஸ்டார் மனைவி

கணவர் கடுப்பானாலும் மகளை கட்டப்பா என்று அழைக்கும் சூப்பர் ஸ்டார் மனைவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி 2 படத்தை பார்த்ததில் இருந்து தனது மகளை கட்டப்பா என்று அழைப்பதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் தெரிவித்துள்ளார்.

பாகுபலி படம் உலக அளவில் ரூ.1,300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் ரூ. 1,500 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் பாகுபலி 2 படத்தை நேற்று பார்த்துள்ளார். படம் பற்றி அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மகள்

மகள்

பாகுபலி படம் பார்த்தேன். அதில் இருந்து என் மகளை அவரின் தந்தை கோபப்பட்டபோதிலும் கட்டப்பா என்றே அழைக்கிறேன். அவர் எங்கள் மகளை ரவுடி என்று அழைப்பதையே விரும்புகிறார்.

கட்டப்பா

கட்டப்பா

படம் பார்த்ததில் இருந்து கட்டப்பா கதாபாத்திரம் மிகவும் பிடித்துவிட்டது. மூன்று முறை கட்டப்பா என்று கூறினால் உங்களால் நிறுத்த முடியாது என்கிறார் ட்விங்கிள்.

சத்யராஜ்

சத்யராஜ்

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களை இன்று பார்த்தோம். படம் மாபெரும் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துக்கள். நீங்கள் அருமையாக நடித்திருந்தீர்கள் சார் என்று ட்விங்கிள் சத்யராஜை பாராட்டியுள்ளார்.

கட்டப்பாவின் மகன்

சத்யராஜை பாராட்டி ட்விங்கிள் போட்ட ட்வீட்டை பார்த்த சிபிராஜ் ட்வீட்டியிருப்பதாவது, மேடம், நான் கட்டப்பாவின் மகன்! உங்கள் ட்வீட்டை பார்த்து அப்பா மகிழ்ச்சி அடைந்தார்! அவர் ராஜேஷ் கன்னாஜியின் மிகப் பெரிய ரசிகர் என தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Akshay Kumar's wife Twinkle tweeted that, 'Saw Baahubali & I've been calling my daughter Kattappa much to her dad's annoyance-Perhaps he would prefer her being called Rowdy instead:)'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil