உன் மாமனாருக்கு தகாத முறையில் பிறந்த மகள்.. ஸ்டார் நடிகரின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: பாலிவுட் நடிகை கஜோல் மற்றும் முன்னாள் நடிகையான டுவிங்கிள் கன்னா ஆகியோர் தொகுத்து வழங்கி வரும் 'டூ மச் வித் டுவிங்கிள் அன்ட் கஜோல் ஷோ' அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் டிம்பிள் கன்னா சொல்லி அந்த விஷயம் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி உள்ளது.
'டூ மச் வித் டுவிங்கிள் அன்ட் கஜோல் ஷோ' முதல் வார நிகழ்ச்சியில் நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஆமீர் கான் ஆகியோர் கலந்து கொண்டு பல விஷயத்தை பேசினார்கள். இதைத்தொடர்ந்து இந்த வாரம், நடிகர் வருண் தவான் மற்றும் ஆலியா கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் பல விஷயம் குறித்து இருவரும் மனம் திறந்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சியின் தலைப்புக்கு ஏற்படி ஏடாகூடமாக கேள்வி கேட்பதே இந்த நிகழ்ச்சியின் சுவாரசியம். இதில், கஜோல், முன்னாள் காதலர்களுடன் இப்போதும் நட்பாக இருக்க முடியுமா என கேட்டார். இந்த கேள்விக்கு இப்போது நான் முதல் சொல்ல முடியாது என ஆலியா கேள்வியை தவிர்த்துவிட்டார். அதே நேரத்தில் வருண் தனது மேலா திரைப்படம் குறித்து ட்விங்கிளை கேலியாக கிண்டல் செய்து பேசினார்.

தகாதமுறையில் பிறந்த குழந்தை: இந்த நிகழ்ச்சியில், அக்ஷய் குமாரின் காதல் மனைவியான டுவிங்கிள் கன்னா, ஆலியாவிடம், உன் மாமனரால் பரவிய ஒரு வதந்தி குறித்து பேசினார். அந்த வதந்தி என்னவென்றால், நான் உங்க மாமனார் ரிஷி கபூருக்கு தகாத முறையில் பிறந்தவள் என்று பேசினார்கள். இந்த விஷயத்தை நீ கேள்வி பட்டு இருக்கியா என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆலியா பட், இப்படி ஒரு வதந்தியா... என்று ஆச்சரியகமா பார்த்தார். அதைத்தொடர்ந்து பேசிய டுவிங்கிள் கன்னா, என்னுடைய பிறந்த நாளுக்கு, ரிஷி கபூர் அவர்கள் என்னை வாழ்த்தி ஒரு ட்வீட் போட்டு இருந்தார்.
ட்வீட்டால் பரவிய வதந்தி: அந்த ட்வீட்டில்,ஹேப்பி பர்த்டே டியர், 1973ம் ஆண்டு வெளியான பாபி படத்தில் நான் உங்கள் அம்மாவை ரொமான்ஸ் செய்தபோது நீ அவர் வயிற்றில் இருந்தாய் என பதிவிட்டு இருந்தார். அதை மக்கள் தவறாக புரிந்து கொண்டு, டிம்பிள் கபாடியாவுக்கும், ரிஷி கபூருக்கும் தகாத முறையில் பிறந்த மகள் தான் டுவிங்கிள் என்று பேச ஆரம்பித்தார்கள். பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன செய்தி தவறாக மாறியதால், ரிஷி கபூர் விளக்கம் அளித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் மனைவியா டிம்பிள் கபாடியா ஹீரோயினாக நடித்த பாபி படம் மூலம் தான் ரிஷி கபூர் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார். அதை மனதில் வைத்துத்தான் அவர் விளையாட்டாக பதிவிட கடைசியில் அதுவே பிரச்சனையாகிவிட்டது என டுவிங்கிள் கன்னா அந்த நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.
பாலிவுட் ஸ்டார் நடிகரான ரிஷி கபூரின் மகன் தான் ரன்பீர் கபூர். இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான இவர் 2007 ஆம் ஆண்டு Saawariya படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து இவர், ஆலியா பட்டுன் இணைந்து Brahmāstra படத்தில் இணைந்து நடித்த போது காதல் வயப்பட்டதை தொடர்ந்து இருவரும், 14 ஏப்ரல் 2022 தேதி திருமணம் செய்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











