Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தலைவர் படத்தில் சர்ப்பிரைஸ் கொடுக்க காத்திருக்கும் 2 ஸ்டார்கள்?
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகிவிட்டது.
Recommended Video
ரஜினியின் 169வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்குவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் ஆரம்பக்கட்டத்திலேயே அடுத்தடுத்த சர்ப்பிரைஸ்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முதல்வர் ஸ்டாலினை மனைவியுடன் சென்று சந்தித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார்.. என்ன விஷயமா இருக்கும்?

அண்ணாத்த படம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் தீபாவளி ரிலீசாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. அண்ணன் -தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சிவா. திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

ரசிகர்களை கவர்ந்த அண்ணாத்த
படம் குறித்த கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் ரஜினி மீண்டும் கமர்ஷியல் அவதாரம் எடுத்திருந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தீபாவளி கொண்டாட்டமாக இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். ஏராளமான ரசிகர்களை திரையரங்குகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்க முடிந்தது.

கமர்ஷியல் படம்
ரஜினியை ஆக்ஷன் அவதாரத்தில் மட்டுமின்றி கமர்ஷியல் படங்களில் பார்க்கவே அவரது ரசிகர்கள் அதிகமாக ஆவலுடன் இருக்கின்றனர் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்தது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு அடுத்து எந்தப் படத்தில் தலைவர் நடிப்பார் என்ற ஆவலும் பல்வேறு யூகங்களும் ரசிகர்களிடையே காணப்பட்டது.

நெல்சன் திலீப்குமார் இயக்கம்
இந்நிலையில் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் மீண்டும் சூப்பர்ஸ்டாரின் படத்தை தயாரிக்கவுள்ளது.

சிவகார்த்திகேயன் பாடல்
தற்போது பீஸ்ட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிசியாக உள்ள நெல்சன், அந்த படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நெல்சன் படங்களில் அடுத்தடுத்த பாடல்களை எழுதியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்திலும் பாடல் எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன்?
ஆனால் அவர் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனும் தமிழில் முன்னணி நடிகராக மாறியுள்ள நிலையில் அவர் படத்தில் எந்த ரோலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாடல் பாடும் சிம்பு?
இந்நிலையில் அடுத்த அப்டேட்டாக படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே நெல்சனின் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காம்பினேஷனில் படம் உருவானால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.