For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜோதிகா, அமலாபால், காஜல் அகர்வாலை தொடர்ந்து நக்மாவுக்கு அடித்த ஜாக்பாட்: ஐக்கிய அரபு அமீரகம் கெளரவம்

  |

  அபுதாபி: நடிகை ஜோதிகாவின் அக்காவான நக்மா, தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

  Recommended Video

  Actor Suriya | ரசிகர்மன்ற நிர்வாகியின் மனைவியை படிப்புக்காக அயர்லாந்து அனுப்பிய சூர்யா

  ரஜினி, கார்த்திக், சரத்குமார் என முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் நக்மா.

  தமிழில் கடைசியாக அஜித்துடன் சிட்டிசன் படத்தில் போலீஸ் ஆபிசராக நடித்திருந்தார் நக்மா.

   விடுமுறைக்கு ஊட்டி சென்றுள்ள நடிகை பூமிகா.. ஒரே ஆட்டம், பாட்டம் தான்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா? விடுமுறைக்கு ஊட்டி சென்றுள்ள நடிகை பூமிகா.. ஒரே ஆட்டம், பாட்டம் தான்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  பாலிவுட் டோலிவுட் கோலிவுட்

  பாலிவுட் டோலிவுட் கோலிவுட்

  தமிழ் சினிமாவிற்கு மும்பையில் இருந்து நாயகிகளை இறக்குமதி செய்வது வழக்கமானது. அப்படியே நடிகை நக்மாவும் இந்தியில் இருந்து தமிழில் அறிமுகமானார். 1990ல் Baaghi: A Rebel for Love என்ற இந்தி படம் மூலம், பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த நக்மா, கிளாமரில் அதகளம் செய்யத் தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கிலும் அமர்க்களம் செய்துவந்த நக்மா தமிழில் ‘காதலன்' படம் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

  சூப்பர் ஸ்டாருடன் ஜோடி

  சூப்பர் ஸ்டாருடன் ஜோடி

  ஷங்கர் இயக்கத்தில் வெளியனா காதலன் திரைப்படம், இளைஞர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் கவர்ச்சியிலும் நடிப்பிலும் தூள் பறத்திய நக்மாவின் மீது, கோலிவுட் இயக்குநர்களின் பார்வை பட்டது. அதுவும் தமிழில் இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார் நக்மா. ரஜினியின் கேரியரில் தரமான சம்பவம் செய்த பாட்ஷா படத்தில், அவருக்கு ஜோடி போட்டு மாஸ் காட்டினார்.

  ஜோதிகாவின் அக்கா நக்மா

  ஜோதிகாவின் அக்கா நக்மா

  பாட்ஷாவைத் தொடர்ந்து ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் ஃபேர்ட்ஸ், மேட்டுக்குடி, அரவிந்தன், பிஸ்தா என தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு கட்டினார் நக்மா. இறுதியாக அஜித் நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘சிட்டிசன்' படத்தில், போலீஸ் ஆபிஸராக வந்து மிரட்டியிருப்பார். அதேநேரம் நக்மாவின் தங்கையாக அறிமுகமான ஜோதிகா, தமிழ் சினிமாவை தன்வயப்படுத்திக் கொண்டிருந்தார்.

  நக்மாவுக்கு கெளரவம்

  நக்மாவுக்கு கெளரவம்

  தமிழில் மார்க்கெட் இல்லாததால், இந்தி, போஜ்புரி மொழிப் படங்களில் நடித்து வந்த நக்மா, சமீபத்தில் பட வாய்ப்புகள் இல்லமல், சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், நக்மாவை ஐக்கிய அரபு அமீரகம் கெளரவித்துள்ளது. பத்தாண்டுகள் வரை தங்கியிருக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கியுள்ளது. ஏற்கனவே நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், விஜய் சேதுபதி ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

  நடிகைகளுக்கும் கோல்டன் விசா

  நடிகைகளுக்கும் கோல்டன் விசா

  திரிஷா ஜோதிகா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது நடிகை நக்மாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழகியுள்ளது. துபாயில் உள்ள அரசு சேவை வழங்கும் ஈ.சி.எச். டிஜிட்டல் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை நக்மாவுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அதிகாரிகள் வழங்கியுள்ளனர்,

  English summary
  UAE is honoring celebrities from India by giving golden visa. Now Actress Nagma has also been granted a golden visa
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X