விஜய்ண்ணா மனசு வச்சா அது நடக்கும்… அஜித்ண்ணா அப்படி சொன்னது வருத்தம் தான்: மனம் திறந்த உதய்ண்ணா!

சென்னை: உதயநிதி ஸ்டாலின் கலகத் தலைவன், மாமன்னன் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதில், மகிழ் திருமேனி இயக்கியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், கலகத் தலைவன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி விஜய், அஜித் இருவருடனுமான நட்பு குறித்து மனம் திறந்துள்ளார்.

கலகத் தலைவனாக உதயநிதி

கலகத் தலைவனாக உதயநிதி

அரசியல் சினிமா என ஆல்ரவுண்டராக கலக்கி வரும் உதயநிதியின் கலகத் தலைவன் திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கலகத் தலைவன் படமும் வெளியாக உள்ளதால், உதயநிதியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். உதயநிதியுடன் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் நடித்துள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

விஜய் மனசு வச்சா?

விஜய் மனசு வச்சா?

இந்நிலையில், கலகத் தலைவன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் உதயநிதி, பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அதில் விஜய் பற்றி பேசிய உதயநிதி, "விஜய் எப்போதுமே எனது நண்பர் தான். தேர்தலுக்கு முன்பு என்னை அவரது வீட்டுக்கு அழைத்து விஜய் விருந்து கொடுத்தார். விஜய் வீட்டில் விருந்து சாப்பிட்டு அவரிடம் வாழ்த்து பெற்ற பின்னரே தேர்தல் பிரசாரத்துக்கு சென்றேன். விஜய்யும் என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். அதேபோல் தேர்தலில் வெற்றிப் பெற்றதும் செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்" என்றார்.

விஜய்யின் அடுத்த படம்

விஜய்யின் அடுத்த படம்

உதயநிதி தயாரிப்பாளராக களமிறங்கிய போது விஜய் நடித்த குருவி படத்தை தான் முதலில் தயாரித்தார். அதனைத் தொடர்ந்தே ஆதவன், மன்மதன் அம்பு என அவரது தயாரிப்புகளில் படங்கள் வெளியாகின. இந்நிலையில், மீண்டும் விஜய்யை வைத்து எப்போது படம் தயாரிப்பீர்கள் என கேட்க்கப்பட்டதற்கு பதிலளித்த உதயநிதி, "எனக்கு ஆசையாக தான் இருக்குது, விஜய்ண்ணா மனசு வச்சா தான் அது நடக்கும்" எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் துணிவு படம் குறித்தும் மனம் திறந்து பதிலளித்தார் உதயநிதி.

அஜித்ண்ணா வேற லெவல்

அஜித்ண்ணா வேற லெவல்

துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுவது குறித்தும், அதன் ப்ரோமோஷன் பற்றியும் உதயநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி "துணிவு படத்தை போனிகபூர் தான் தயாரித்துள்ளார், நாங்கள் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் மட்டும்தான் பண்றோம். துணிவு ப்ரோமோஷனுக்கு அஜித் வருவார் என எதிர்பார்த்தேன், ஆனால் அவர் முடியாது என சொல்லிவிட்டார். அதில் எனக்கு வருத்தம் தான் என்றாலும், அஜித்ண்ணா வேற லெவல், அதனால அவரோட படத்துக்கு ப்ரோமோஷன் தேவைப்படாது" எனக் கூறியுள்ளார். விஜய், அஜித் குறித்து ஒரே மேடையில் உதயநிதி பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X