»   »  'கெத்து' உதயநிதியுடன் கைகோர்க்கும் விஷ்ணு விஷால்... சுசீந்திரனுக்காக!

'கெத்து' உதயநிதியுடன் கைகோர்க்கும் விஷ்ணு விஷால்... சுசீந்திரனுக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கெத்து, மனிதன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்காக தனது படைப்பை சமரசம் செய்து கொள்ளாத இயக்குனர்களில் குறிப்பிடத் தகுந்தவர் சுசீந்திரன்.இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'பாயும் புலி' பாக்ஸ் ஆபிஸில் எடுபடவில்லை.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்காக உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஷ்ணு விஷாலுடன் கைகோர்த்து இருக்கிறார் சுசீந்திரன்.ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் கதையாக உருவெடுக்கும் இப்படத்தில் ஆரம்பத்தில் உதயநிதியை மட்டுமே சுசீந்திரன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

தற்போது சுசீந்திரனின் அறிமுக ஹீரோ விஷ்ணு விஷாலும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது.

இதில் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ஒளிப்பதிவாளர் மதி ஆகியோர் கலந்து கொண்டனர். இமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பானது மார்ச் முதல் தொடங்கவிருக்கிறது.

படத்தில் உதயநிதி, விஷ்ணு விஷால் என்று 2 நாயகர்கள் இருந்தாலும் மஞ்சிமா மோகன் மட்டுமே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

படத்தில் இன்னொரு ஹீரோயினுக்கு இடமுண்டா? இல்லை முக்கோணக் காதல் கதையா? என்பது தெரியவில்லை.

வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi Stalin now Team up with Vishnu Vishal for his Next Movie, The Normal Shoot Starts from March.

60 words

கெத்து, மனிதன் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது.இதில் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ஒளிப்பதிவாளர் மதி ஆகியோர் கலந்து கொண்டனர். இமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பானது மார்ச் முதல் தொடங்கவிருக்கிறது.

English summary
Udhayanidhi Stalin now Team up with Vishnu Vishal for his Next Movie, The Normal Shoot Starts from March.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil