»   »  நான் வாங்கி வெளியிட்ட படங்கள் அத்தனையும் ஓடியிருக்கின்றன- உதயநிதி

நான் வாங்கி வெளியிட்ட படங்கள் அத்தனையும் ஓடியிருக்கின்றன- உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் தயாரித்த சில படங்கள் சரியாகப் போகாவிட்டாலும், வாங்கி வெளியிட்ட படங்கள் நன்றாகவே ஓடியிருக்கின்றன என்றார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.

‘அட்டகத்தி' தினேஷ், நகுல், பிந்துமாதவி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ள படம் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்'. ராம் பிரகாஷ் ராயப்பா கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார். வி.எல்.எஸ். ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தை ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார்.

இந்தப் படக்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் நிறைய படங்களைத் தயாரித்துள்ளேன். மைனா போன்ற சில படங்களை வாங்கி வெளியிட்டுள்ளேன். தயாரித்த படங்களில் சில நன்றாக போகாமல் இருந்தாலும் வாங்கி வெளியிட்ட அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன.

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்

‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்' படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது. பிறகு டிரெய்லரை பார்த்தேன் வித்தியாசமாக இருந்தது. உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் வி.சந்திரனை தொடர்பு கொண்டு படத்தை பார்க்க விரும்புவதாக கூறினேன்.

வித்தியாசமான படம்

வித்தியாசமான படம்

அவரும் படத்தை எனக்கு காட்டினார். சாதாரண படமாக இல்லை. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத வித்தியாசமான விஷயம் இருந்தது. கமர்சியல் படத்துக்கான விஷயங்கள், காதல் காட்சிகள் எல்லாமே சிறப்பாக இருந்தன. எனவே உடனடியாக இந்தப் படத்தை வாங்கி வெளியிட முன் வந்தேன். வருகிற 20-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது," என்றார்.

மொபைல் போன்

மொபைல் போன்

இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறுகையில், "மொபைல் போனை பலரும் உபயோகிக்கின்றனர். அந்த போன் பயன்பாட்டை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்," என்றார்.

நடிகை பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா, நடிகர் நகுல் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.

English summary
Actor cum Producer Udhayanidhi says that all the movies he presented as distributor were done well in the box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil