திருப்பதி கோயிலில் திடீரென நயன்தாரா கையை பிடித்து இழுத்த நபர்.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: நடிகை நயன்தாராவின் கையை திடீரென நபர் ஒருவர் பிடித்து இழுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.
கோலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் மலையாள திரை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தனி ரூட்
நடிகை நயன்தாரா இன்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தனி ரூட்டில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினரை தேவஸ்தானத்தை சேர்ந்த ஆட்கள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர். வேட்டி சட்டையில் விக்னேஷ் சிவனும் மஞ்சள் நிற சேலையை அணிந்து கொண்டு நயன்தாராவும் சாமி தரிசனம் செய்தனர்.

அலைமோதிய கூட்டம்
அப்படியிருந்தும் நயன்தாரா வந்ததை அறிந்த பக்தர்கள் அவரை காண திடீரென திரண்டனர். பவுன்சர்கள் உதவியுடன் கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் செல்ல வேண்டும் என விறு விறுவென நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அப்போது திடீரென ஒரு கை நயன்தாராவின் கையை அழுத்தமாக பிடித்தது.

நயன்தாராவை கையை பிடித்து
கூட்டத்தில் திடீரென ஒருவர் நடிகை நயன்தாராவின் கையை பிடித்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சில செய்தி சேனல்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளன. நயன்தாராவின் கையை பிடித்த அடுத்த நொடியே அந்த நபர் கையை விட்டு விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார்.

முறைத்த நயன்தாரா
தனது கையை கூட்டத்தில் இருந்து ஒருத்தர் பிடிப்பதை உடனடியாக கவனித்த நடிகை நயன்தாரா அந்த இடத்திலேயே நின்று அவரை முறைத்தார். உடன் இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் அந்த நபரை முறைக்க அவர் அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டார். சற்று நேரத்திற்கு இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை நயன்தாரா கடும் அப்செட்டாகி அங்கிருந்து கிளம்பினார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளை பிரஸ்மீட்
இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு முன்னதாகவே பத்திரிகையாளர்களை சந்தித்து தனது திருமணம் குறித்த அறிவிப்பையும் அதன் பிறகு ஜூன் 11ம் தேதி தனது மனைவி நயன்தாராவுடன் பத்திரிகையாளர்களை சந்திப்போம் எனக் கூறியிருந்தார். நாளை அந்த நிகழ்வில் புதுமண தம்பதிகள் இருவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான் படம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை முடித்த நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக தமிழில் ஓ2 படம் ஓடிடியில் வெளியாகிறது. தெலுங்கில் லூசிஃபர் படத்தின் ரீமேக்கான காட்ஃபாதர், மலையாளத்தில் பிருத்விராஜ் உடன் கோல்ட் உள்ளிட்ட படங்களும் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளன. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் மும்பை பறக்க உள்ளார் நயன்தாரா.


Click it and Unblock the Notifications











