»   »  உப்பு கருவாடு.. அதிகரிக்கும் தியேட்டர்கள் எண்ணிக்கை!

உப்பு கருவாடு.. அதிகரிக்கும் தியேட்டர்கள் எண்ணிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உப்பு கருவாடு படம் குறித்து நல்ல 'டாக்' பரவி வருவதால் படத்தை மேலும் பல அரங்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளனவாம்.

திரைக்கதை நன்றாக இருந்தால் போதும்... நட்சத்திர படங்கள் தான் ஓடும், சின்ன படங்கள் பெரிதாக ரசிகர்களை கவராது என்ற கூற்று தவிடுபொடியாகிவிடும்.


Uppu Karuvadu getting more theaters

இதை சமீபத்தில் நிரூபித்துள்ள படம் உப்பு கருவாடு. ராதாமோகனின் இந்தப் படத்துக்கு ஏக வரவேற்பு. படம் ஓடும் அரங்குகளில் ஒரே சிரிப்பு மழை.


Uppu Karuvadu getting more theaters

படம் பார்த்தவர்கள் அடுத்தவர்களிடம் இந்தப் படத்தை பாராட்டி, பார்க்க வேண்டிய படம் எனக் கூறி வருகிறார்கள்.


"நடித்த பெரும்பாலான படங்களில் வெற்றி பெரும் அதிர்ஷ்ட தூதர் கருணாகரன், மிகச் சிறந்த நடிப்பு என எல்லோராலும் பாராட்டப்படும் நந்திதா, வித்தியாசமான வேடத்தில் கலக்கும் எம் எஸ் பாஸ்கர், புதிய வரவான ' டவுட்' செந்தில், விலா நோகச் சிரிக்க வைக்கும் மயில்சாமி, தனது வசன வரிகளால் ரசிகர்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த வசனகர்த்தா பொன் பார்த்திபன், துள்ளலான பாடல் மற்றும் பின்னணி இசையால் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், தனக்கே உரிய ஒரு பிரத்தியேக வடிவத்தில் படத்தை செதுக்கிய இயக்குனர் ராதா மோகன், தேவைக்கேற்ப திட்டமிட்டு செலவு செய்த தயாரிப்பாளர் ராம்ஜி, முறையாக விளம்பரம் செய்து, போட்டிக்கிடையே நிறைய திரை அரங்குகளில் படம் திரை இட்ட விநியோக நிறுவனம் ஆரா சினிமாஸ் என 'உப்பு கருவாடு'படத்தின் வெற்றிக்கு வித்து இட்டவர்கள் ஏராளம்.


Uppu Karuvadu getting more theaters

நாங்கள் எல்லோரும் எங்களுக்கு இடப்பட்ட பணியை செவ்வனே செய்தோம். ஆயினும் ஒரு நல்ல கேப்டனாக இந்தக் திறம்பட நடத்திச் செல்லலும் இயக்குனர் ராதா மோகனுக்கு தான் இந்த வெற்றி உரியது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வரும் பெருகி வரும் உற்சாகம் ஒரு நல்ல படத்தை விநியோகித்தவர்கள் என்ற முறையில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல கதை- திரைக்கதை இருந்தால் சின்ன படமும் பெரிய படம்தான் என உணர்த்தியது 'உப்பு கருவாடு' என்கிறார் ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ்.

English summary
Due to the wide spreading good talk, Radha Mohan's Uppu Karuvadu is getting more number of theaters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil