»   »  இந்தியாவிலேயே சிறந்த நடிகை.. ஊர்வசிதான்... புகழ்ந்து தள்ளும் பிரபு!

இந்தியாவிலேயே சிறந்த நடிகை.. ஊர்வசிதான்... புகழ்ந்து தள்ளும் பிரபு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியளவில் சிறந்த நடிகை என நடிகை ஊர்வசியை பிரபு பாராட்டியிருக்கிறார்.

'உன்னோடு கா' படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அபிராமி திரையரங்கில் நடைபெற்றது. இதில் பிரபு, ஊர்வசி, அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Urvashi is one of the best Actress says Prabhu

விழாவில் நடிகர் பிரபு பேசும்போது "உன்னோடு கா படத்தில் நடித்தது ஜாலியான அனுபவமாக இருந்தது. நகைச்சுவை, காதல், குடும்பம் என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய ஜனரஞ்சக படமாக 'உன்னோடு கா' வந்துள்ளது.


இன்றைய காலத்தில் படம் எடுப்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கிறது. அதிலும் அபிராமி ராமநாதன் ஒரு படத்தை அருமையாக சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து உருவாக்கியிருக்கிறார்.


அண்ணன் கமலஹாசன் சொன்னதுபோல இந்தியளவில் சிறந்த நடிகை ஊர்வசி. அவருடன் சேர்ந்து நடித்தாலே நாம் நடிக்கும் காட்சிகள் மெருகேறிவிடும்" என்று ஊர்வசியைப் பாராட்டினார்.


தொடர்ந்து பேசிய "இந்த படத்தில் பிரபு ஜோடியாக நடித்துள்ளேன். அவருடன் நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன். 1984 முதல் பிரபு வீட்டு சாப்பாட்டை நான் சாப்பிடுகிறேன்.


மனம் சஞ்சலமாக இருக்கும்போதெல்லாம் ஆறுதல் சொல்லி இருக்கிறார்" என்று பதிலுக்கு பிரபுவைப் பாராட்டினார்.

English summary
'Urvashi is one of the best Actress in India' Prabhu says in Recent Audio Function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil