»   »  'குழந்தை பாவம்மா...' - 'தெய்வமகள்' சத்யாவின் ஜிமிக்கி கம்மல்!

'குழந்தை பாவம்மா...' - 'தெய்வமகள்' சத்யாவின் ஜிமிக்கி கம்மல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தெய்வமகள் வாணி போஜன் ஜிமிக்கி கம்மல் டான்ஸ்-வீடியோ

சென்னை : மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'.

இந்தப் பாடல் கேரள மக்கள் தாண்டி பெரும்பாலானோருக்கும் பிடித்திருந்தது. இந்தப் படத்தைப் ப்ரொமோட் செய்வதற்காக 'ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்' ஒன்று தொடங்கப்பட்டது.

இந்த சேலஞ்சின் மூலம்தான் இந்தப் பாடல் செம ஹிட் ஆனது. தமிழ், மலையாளம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது 'ஜிமிக்கி கம்மல்'.

ஷெரில் ட்ரெண்ட் :

ஷெரில் ட்ரெண்ட் :

கேரளாவின் ஒரு கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி யூ-ட்யூபில் பதிவேற்றிய வீடியோ பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்த வீடியோவில் ஆடிய ஆசிரியை ஷெரில் இதன்மூலம் பிரபலமானார்.

ஜிமிக்கி கம்மல் ரீமிக்ஸ் :

ஜிமிக்கி கம்மல் ரீமிக்ஸ் :

தமிழ் நடிகர்கள், நடிகைகள் ஆகியோரின் நடன அசைவுகளை 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்குப் பொருத்தமாக எடிட் செய்து அவற்றையும் வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

தெய்வமகள் 'ஜிமிக்கி கம்மல்' :

இந்நிலையில், 'தெய்வமகள்' தொலைக்காட்சித் தொடரில் நாயகி சத்யாவாக நடிக்கும் வாணி போஜன், அந்தத் தொடரில் குழந்தை மஹாவாக நடிக்கும் குழந்தையுடன் 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு ஆடுவதைப் போல் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்திருக்கின்றனர்.

ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி :

ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி :

'தெய்வமகள்' சீரியல் மூலம் வாணி போஜனுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு வாணி போஜன் குழந்தையை ஆடவைத்ததையும், அவரது க்யூட்டான எக்ஸ்பிரசன்களையும் ரசித்து வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

English summary
'Jimikki Kammal' is a song from Mohanlal starrer 'Velipaadinde Pusthakam'. Vaani Bhojan, who plays the 'Deivamagal' TV series, has danced for the song 'Jimikki Kammal' with the baby.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil