வெறித்தனத்துக்கும் மேலான வெறித்தனம்.. வேற லெவல் டான்ஸ்.. வாத்தி கம்மிங் ஒத்தே!

சென்னை: மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிளான வாத்தி கம்மிங் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

Recommended Video

Master Audio Launch Special Update | Leela Palace | Thalapathy Vijay Speech

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 64வது படமாக உருவாகி வருகிறது மாஸ்டர் திரைப்படம்.

பிகில் படத்தில் ஓபனிங் பாடலாக இடம்பெற்ற வெறித்தனம் பாடல், விஜய் ரசிகர்களுக்கு வேற லெவல் எனர்ஜி கொடுத்த நிலையில், அடுத்த வெறித்தனத்தை வாத்தி கம்மிங் பாடல் காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

30 மில்லியன்

அனிருத் இசையில், அருண் ராஜா காமராஜ் வரிகளில், நடிகர் விஜய்யின் இளமை துள்ளும் குரலில் வெளியான குட்டி ஸ்டோரி பாடல், இதுவரை 30 மில்லியன் வியூஸ் கடந்து வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், இன்று மாலை செகண்ட் சிங்கிள் ரிலீசாகுது.

வாத்தி கம்மிங்

குட்டி ஸ்டோரி பாடல், நிறைய பாசிட்டிவ் கருத்துக்கள் நிறைந்து, மாணவர்களுக்கு, அட்வைஸ் சொல்லும் பாடலாக அமைந்திருந்தது. இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல், தர லோக்கல் நடனத்துடன், மாஸ் காட்டும் என்றும், நடிகர் விஜய் இந்த பாடலுக்காக, செம டான்ஸ் ஆடியுள்ளார் என்றும், ஷாந்தனு உள்ளிட்ட நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெறியேறுது

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், விவேக் வரிகளில் வெளியான "நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்" பாடல், விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்று மாலை 5 மணிக்கு ரிலீசாகவுள்ள வாத்தி கம்மிங் பாடலிலும், விஜய் செம டான்ஸ் போட்டுள்ள தகவல், ரசிகர்களை மேலும் வெறியேற்றி வருகிறது.

சாமி பாட்டு

மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலை, ராஜகாளி அம்மன் படத்தில் வரும் "சந்தன மல்லிகை" பாடலுடன் ஒப்பிட்டு விஜய் ஹேட்டர்கள் கலாய்த்தனர். அனிருத் இசையில், தர்பார் படத்தில் வந்த சும்மா கிழி பாடலை, ஐயப்பா பாடலுடன் ஒப்பிட்டு ஓட்டினர். இந்நிலையில், அடுத்த சாமி பாட்டு வரப்போகுது என ஹேட்டர்கள் கிண்டல் கமெண்ட்டுகளும் பதிவிட்டு வருகின்றனர்.

யாரா இருப்பா?

யாரா இருப்பா?

மாஸ்டர் செகண்ட் சிங்கிளான வாத்தி கம்மிங் பாடலை யார் எழுதியிருப்பா? யார் பாடியிருப்பா? என்ற சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. விஜய் ரசிகர்கள், அனிருத் பாடியிருப்பார் என்றும், விக்னேஷ் சிவன் பாடலை எழுதியிருப்பார் என்றும் சொல்கின்றனர். மேலும், சிலர், ரத்னகுமார் தான் பாடலை எழுதியிருக்கிறார் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். எப்படி இருந்தாலும், இன்று மாலை 5 மணிக்கு பழைய ரெக்கார்டுகளை வாத்தியார் வந்து உடைத்தெறிவார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X