யூடியூபில் இருந்து டிவிக்கு ஜம்ப்பான பிளாக்‌ஷீப் டீம்.. அதுவும் வடிவேலுவோட வெறித்தனமா வராங்க!

சென்னை: ஸ்மைல் சேட்டை யூடியூப் மூலம் ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வந்த விக்னேஷ்காந்த் மற்றும் அவரது குழுவினர் ஒன்றாக சேர்ந்து தனியாக பிளாக்‌ஷீப் எனும் யூடியூப் சேனலை தொடங்கினர்.

விஜய் அவார்ட்ஸ் ரேஞ்சுக்கு விருது விழா நிகழ்ச்சியெல்லாம் நடத்த ஆரம்பித்த அவர்கள் தற்போது புதிதாக டிவி சேனலையே ஆரம்பித்துள்ளனர்.

விரைவில் ஒளிபரப்பாகவுள்ள அந்த டிவி சேனலில் இவர்களுடன் வைகைப் புயல் வடிவேலும் கைகோர்த்துள்ளது தான் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிளாக்‌ஷீப் யூடியூப் சேனல்

பிளாக்‌ஷீப் யூடியூப் சேனல்

பிளாக்‌ஷீப் எனும் யூடியூப் சேனலை ஸ்மைல் சேட்டையில் இருந்து வெளியே வந்த விக்னேஷ்காந்தும் அவரது நண்பர்களும் இணைந்து ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழ் யூடியூப் சேனல்களையும் ஒன்றாக இணைத்து டிஜிட்டல் அவார்ட்ஸ் உள்ளிட்ட விருது விழாக்களை நடத்தி பிரபலமான நிலையில், சொந்தமாக டிவி சேனலே தொடங்கும் அளவு அவர்கள் சம்பாதித்து விட்டனரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

காசு கொட்டுது

காசு கொட்டுது


வேலை கிடைக்காத இளைஞர்கள் ஒரு கேமராவை மட்டுமே வாங்கி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி யூடியூப் சேனல் ஆரம்பித்து மாதம் பல ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை சம்பாதித்து வருவதாக கூறுகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிகளவில் யூடியூப் சேனல்களை கண்டு ரசிப்பதால் இவர்களுக்கு காசு கொட்டோ கொட்டென கொட்டி வருகிறது என்கின்றனர்.

யூடியூப் டு டிவி சேனல்

யூடியூப் டு டிவி சேனல்

சன் டிவி, விஜய் டிவி என டிவி சேனல்களிலும் தலை காட்டி வந்த விக்னேஷ்காந்த் தற்போது சொந்தமாக பிளாக்‌ஷீப் எனும் டிவி சேனலையே தனது நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்துள்ளார். வரும் தீபாவளி முதல் அந்த டிவி சேனல் ஆரம்பமாக போகிறது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிளாக்‌ஷீப் டிவியில் வடிவேலு

பிளாக்‌ஷீப் டிவியில் வடிவேலு

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 என சினிமாவில் மீண்டும் பிசியாகி உள்ள நடிகர் வடிவேலு தற்போது பிளாக்‌ஷீப் டிவியின் கிராண்ட் அம்பாசிடராகவே மாறிவிட்டார் என புதிய புரமோ அறிவிப்பையே பிளாக்‌ஷீப் டீம் வெளியிட்டுள்ளனர். ஹலோ பிளாக்‌ஷீப் டிவி ஓனரா.. கடை எப்ப சார் திறப்பீங்க என வடிவேலு அவர்களுடன் இணைந்து அட்டகாசம் செய்துள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X