»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஏ.. சிங்கம் போலே நடந்து வர்ரான் செல்ல பேரான்டி... பாடலைப் பாடியும், ஆடியும் தமிழகத்தில் தனது புகழைப்பரப்பிக் கொண்ட பரவை முனியம்மாவுடன் ஜோடி சேர்ந்து வைகைப் புயல் வடிவேலு ஒரு பாட்டுக் கட்டவுள்ளார்.(பரவை என்பது மதுரைப் பக்கம் அருகே உள்ள கிராமம். முனியம்மாவின் சொந்த ஊர்)

மதுரைப் பக்கம் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பரவை முனியம்மா, தூள் படத்துப் பின் தூள்முனியம்மாவாகி விட்டார்.

இப்போது கலக்கல் கிழவி வேடமா, மனோரமா போன்றவர்கள் செய்த கெளர வேடமா முனியம்மாவைக்கூப்பிடுங்கப்பா என்று அழைத்து வந்து விடுகிறார்கள்.

சினிமா மட்டுமல்லாமல், விளம்பரங்களிலும், டிவிசீயரில்களிலும் கூட பாடி, ஆடி, தலை காட்ட ஆரம்பித்து விட்டார் முனியம்மா.

அடுத்ததாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கோவில் என்ற படத்தில் முனியம்மாவும் வடிவேலுவும் சேர்ந்து பாடப்போகிறார்களாம்.

நிற்க.

இதற்கான மெட்டை ஹாரிஸ் போட்டுக் காட்டியபோதே வடிவேலு லேசாக ஆடினாராம். அந்தஅளவுக்கு படு அசத்தலான டண்டக்கனக்கா பீட்டாம்.

தமிழகத்தையே கலக்கும் என்கிறார் ஹாரிஸ்.

விவேக் பாஷையில் சொன்னால், வாங்கி போட்டு குத்துங்கப்பா..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil