Don't Miss!
- News
பரந்தூர் ஏர்போர்ட் உறுதி.. பிரச்சனையை தமிழ்நாடு அரசுதான் தீர்க்கனும்: மத்திய அமைச்சர் சிந்தியா
- Technology
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Sports
சுப்மன் கில் தான் தொடக்க வீரர்..ராகுல் அந்த பணியை செய்ய மாட்டாரா? முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தடைகள் கடந்த வெற்றி... நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தயாரிப்பாளர் ஹேப்பி: வடிவேலு சொன்ன மாமன்னன் சீக்ரெட்
சென்னை: வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியானது.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது.
அதிகம் எதிர்பார்ப்புடன் ரிலீஸான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்திலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தடைகளை கடந்து வெற்றிப் பெற்றுள்ளதாக நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
5 படம் ஃபிளாப்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்.. குரைக்கிற நாய் குரைக்கட்டும் என சீறிய அசோக் செல்வன்!

கம்பேக் கொடுத்த வைகைப்புயல்
கோலிவுட்டில் மிக முக்கியமான காமெடி நடிகர்களுள் ஒருவரான வடிவேலு, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின்னர் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தாலும், ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினார். 24ம் புலிகேசி படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி இருந்தார் வடிவேலு. ஆனால், அப்போது ஏற்பட்ட பிரச்சினையால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில் தற்போது பஞ்சாயத்து எல்லாம் முடிந்து மீண்டும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சக்சஸ்
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹிரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கடந்த 9ம் தேதி வெளியானது. வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சிங்கர் சிவாங்கி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்ததால் சரியான ஓப்பனிங் இல்லை என சொல்லப்பட்டது. ஆனால், பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ள வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தடைகளை கடந்து வெற்றிப் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். ஏராளமான தடைகள், எதிர்ப்புகள், பிரச்சினைகள், வதந்திகள் எல்லாவற்றையும் கடந்து இந்தப் படம் வெற்றிப் பெற்றுள்ளது என்றுள்ளார்.

தயாரிப்பாளர் செம்ம ஹேப்பி
மேலும், நான் கம்பேக் கொடுக்கவில்லை, எப்போதுமே ரன்னிங்கில் தான் இருக்கிறேன். என்னுடைய காமெடி காட்சிகள் இன்னும் ரசிகர்களால் விரும்பப்படுகிறது. தொடர்ந்து மீம்ஸ்களிலும் நான் தான் வைரலாகி வருகிறேன் எனக் கூறியுள்ளார். அதேபோல், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியால், தயாரிப்பாளர் ஹேப்பியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாமன்னன் சீக்ரெட்
அதனைத் தொடர்ந்து பேசியுள்ள வடிவேலு, மாமன்னன் படம் குறித்தும் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார். அதில், இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் தான் மாமன்னன் என்றும் முக்கியமான தகவலை கூறியுள்ளார். உதயநிதி ரொம்ப பெருந்தன்மையாக என்னை முக்கியமான கேரக்டரில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ், மாமன்னன் படத்திற்காக ரொம்பவே உழைத்துள்ளதாகவும், இந்தப் படம் நிச்சயம் உதயநிதியின் கடைசிப் படம் என்பதற்காக நியாயம் சேர்க்கும் எனவும் வடிவேலு கூறியுள்ளார். அதேபோல், சந்திரமுகி 2 படமும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் இருக்கும், முக்கியமாக முதல் பாகத்தை விட இந்தப் பாகம் நன்றாக வந்துள்ளதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.

இனி காமெடி மட்டும் தான்
முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றிருந்த வடிவேலு, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இனி தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் நடிப்பேன் எனக் கூறியிருந்தார். அதேபோல் தன்னுடன் நடித்த பழைய நடிகர்களையும் புதிய காமெடி கூட்டணியில் இணைத்துக்கொள்வது என கூறியிருந்தார். வடிவேலு ஹீரோவாக நடித்து மார்க்கெட்டை இழப்பதைவிடவும், காமெடியனாக நடித்து இருப்பதை தக்க வைத்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.