வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்..எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை : வைகை புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, லொள்ளு சபா மாறன் மற்றும் இடிஷ் பிரசாந்த் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் வடிவேலு நாயகனாக நடித்து வரும் நகைச்சுவை திரைப்படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நாய் ஒன்று முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறது.

வைகை புயல் வடிவேலு

வைகை புயல் வடிவேலு

தமிழ் சினிமாவில் வடிவேலுவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இவரது நகைச்சுவையான பேச்சு மட்டுமன்றி இவரது உடல் அசைவுகளை பார்த்தாலே போதும் குபீரென்று சிரிப்பு வந்துவிடும். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ்

இயக்குநர் சுராஜ் எழுதி இயக்கம் இந்தப் படத்தை, சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார். 2006-ல் சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் நாய் சேகர். அந்த பெயர் அவருக்கு பக்காவாக பொருந்து போய், அந்த படத்தின் காமெடியும் மிரட்டலாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தை மனதில் வைத்தே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு பாதிப்பு

படப்பிடிப்பு பாதிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற படக்குழுவினருக்கு தொற்று ஏற்பட்டு பின்னர் உடல்நிலை தேறினர். இதனால் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் வடிவேலு பாடலையும் பாடி உள்ளார்.

வெளியாக வாய்ப்பு

வெளியாக வாய்ப்பு

இந்நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்க வெளியீட்டுக்கான ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

அதனை தொடர்ந்து வடிவேலு மீண்டும் ஒரு பெரிய திட்டத்தில் இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற பலர் நடிக்கின்றனர். மாமன்னன் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஒரு ஷெட்யூல் சமீபத்தில் சேலத்தில் நடைபெற்று முடிந்தது. இதுவரை ஓய்வெடுத்த வடிவேலு மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X