சன்னதிக்கு காசு.. சாமிக்கிட்ட க்ளோஸு.. வடிவேலு பாடிய நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

சென்னை: நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்.

வரும் டிசம்பர் மாதம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாக உள்ள நிலையில், அதன் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.

பணக்காரன் எனும் கரன்ட் பில், பெட்ரோல் விலை மற்றும் சன்னதியில் சிறப்பு தரிசனத்துக்கு காசு உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கி உள்ளனர்.

வடிவேலு வெறித்தனம்

வடிவேலு வெறித்தனம்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீசுக்காக ரொம்பவே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு. சந்தோஷ் நாராயணன் இசையில் முதல் பாடலாக வெளியான அப்பத்தா பாடல் டிரெண்டாகி வரும் நிலையில், தற்போது செகண்ட் சிங்கிளாக பணக்காரன் பாடலை வெறித்தனமாக பாடி வெளியிட்டுள்ளார் வடிவேலு.

பணக்காரன் பாடல்

பணக்காரன் பாடல்

ரஞ்சிதமே பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள பணக்காரன் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. ஏகப்பட்ட கரன்ட் மேட்டர்களை பாடல் வரிகளாக மாற்றி தெறிக்கவிட்டு இருக்கிறார் விவேக்.

சன்னதிக்கு காசு

சன்னதிக்கு காசு

ஓ மை காட் நாம பணக்காரன்.. ஓ மை காட் உன்னை தொடப்போறேன் என அட்டகாசம் செய்யும் இந்த பாடலில் கரன்ட்டுக்கு காசு, அரை லிட்டர் பெட்ரோல் போட்டேன், சன்னதிக்கு காசு.. சாமிகிட்டே க்ளோஸு உள்ளிட்ட வரிகள் இடம்பெற்றுள்ளன.

எக்கச்சக்க மீம்ஸ்

எக்கச்சக்க மீம்ஸ்

வடிவேலு நடிக்காமல் இருந்தாலும் தினமும் அவரது மீம்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி அவரை என்றுமே மறக்க முடியாத அளவுக்கு மாற்றி வைத்த நிலையில், இந்த பாடலிலும் எக்கச்சக்க மீம்ஸு எங்கும் நம்ம ஃபேஸு.. என்றும் ஆட்டம் பாட்டத்துடன் வடிவேலு ஆடிப் பாடும் லிரிக் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

டிசம்பர் 9 ரிலீஸ்

டிசம்பர் 9 ரிலீஸ்

லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி நாராயணன், விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகிறது. நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தைத் தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 என அடுத்தடுத்து படங்களில் வடிவேலுவின் காமெடி அட்டகாசத்தை ரசிகர்கள் கண்டு ரசிக்க காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X