»   »  வலுக்கும் புலிகேசி பிரச்சனை: வடிவேலுவுக்கு ரெட் கார்டா?

வலுக்கும் புலிகேசி பிரச்சனை: வடிவேலுவுக்கு ரெட் கார்டா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
வலுக்கும் புலிகேசி பிரச்சனை- வீடியோ

சென்னை: வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

ஷங்கர் தயாரிப்பில் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்துவிட்டு வடிவேலு நடிக்க மறுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து விளக்கம் கேட்டு வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் கடிதம் அனுப்பியது. வடிவேலு தனது பக்க நியாயத்தை எடுத்துக்கூறி விளக்க கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

கடிதம்

கடிதம்

இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்க 1-6-2016இல் ஒப்புக் கொண்டேன். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்துவிடுவதாகவும், அதுவரை வேறெந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன். ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத் தொடங்காமலே காலம் தாழ்த்தினர்.

விளக்கம்

விளக்கம்

இருந்தாலும், தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன். இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது. அத்துடன், கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர் சங்கம்

நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016 - 2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.

நாசர்

நாசர்

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு, என்னை அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது. இந்தப் படத்தில் நாசர் நடிப்பதால், நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால், நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும். பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வடிவேலு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தடை

தடை

விளக்க கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ள தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு நடிக்க தடை விதிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறதாம். தடை விதிக்கப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்று வடிவேலு தனது வழக்கறிஞர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறாராம் வடிவேலு.

English summary
Comedian Vadivelu has told the TFPC that he won't act in 24am Pulikesi movie. TFPC is thinking about giving red card to Vadivelu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X