»   »  இன்குலாப் என்றால் புரட்சி!- கவிஞர் வைரமுத்து இரங்கல்

இன்குலாப் என்றால் புரட்சி!- கவிஞர் வைரமுத்து இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிஞர் இன்குலாப் வாழ்வோடு சமரசம் செய்துகொள்ளாமல் சாவைத் தழுவிய கவிஞன் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் இன்குலாப் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

இன்குலாப் என்ற கவிஞனின் பெளதிக உடல் மறைந்துவிட்டது. தான் நம்பிய தத்துவத்தோடு சமரசம் செய்துகொள்ளாத கவிஞன், வாழ்வோடு சமரசம் செய்துகொள்ளாமல் சாவைத் தழுவியிருக்கிறான். எந்த மழைக்காலமும் அந்தப் புரட்சித் தீயை அணைத்துவிட முடியாது.

Vairamuthu condoles for Poet Inkulab death

விருதுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத கவிஞன், என் பிறந்த நாளில் வழங்கப்பட்ட கவிஞர்கள் திருநாள் விருதை மட்டும் பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப் படுத்தினார். அவர் கவிதைகள் மரணத்தின் விரல்களால் தொடமுடியாதவை. இன்குலாப் மரணத்தை வென்ற கவிஞன்.

மழையோடு சேர்ந்து அழுகின்றன என்னிரண்டு கண்ணீர்த் துளிகளும்.

-இவ்வாறு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

English summary
Poet Vairamuthu has condoled for the death of Poet Inkulab.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil