For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நறுமுகையே.. நறுமுகையே.. வைரமுத்துவின் தமிழ்.. ஆட்சி செய்த பாடல் வரிகள்!

  |

  சென்னை : ஒரு திரைப்படத்தை உயிர்ப்பிக்க செய்வது பாடல்தான். இரண்டரை மணி நேர சினிமாவில் நம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து பயணிப்பது அந்த நான்கரை நிமிட பாடல் தான்.

  எண்ண ஓட்டத்தை அளந்து தலைகோதி தாலாட்டவும், சட்டேன்று மூச்சற்று நின்று கண்ணீர் வரவைத்து, வலியை பாய்ச்சும் ஒரு வலிமை ஒரு பாடலுக்கு உண்டு, என்று சொல்லலாம். பாடல் பல இனிமையான தருணங்களில் நம்முடன் இனிதே பயணிக்கும் அறு மருந்து.

  ஆயிரம் வார்த்தைகள் ஜாலமிடும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடலுக்கு இருக்கும் சிறப்பு, சொல்லில் அடங்காது. அவ்வாறு நம் இதயம் தொட்டு, தனி சிம்மாசனம் போட்டு அதில் ரீங்காரமாக அமர்ந்திருக்கும் வைரமுத்துவின் பாடல் வரிகளில் இதயம் தொட்ட சில பாடல்களை பற்றி பார்ப்போம்.

  மோட்சம் அடைந்த ரசிகர்கள்

  மதத்தை தாண்டி காதலை சொல்லிய படம் தான் ‘பம்பாய்‘ அந்த காதலுக்கு உயிர் ஊட்டியது கவிபேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகள். அவன் பிறப்பால் இந்து.. அவள் பிறப்பால் முஸ்லிம். காதல் வலையில் விழும் ஒரு பெண்ணின் காதல் ஏக்கத்தை அழகாக ‘‘கண்ணாளனே எனது கண்ணை
  நேற்றோடு காணவில்லை" "என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை, என்று காதல் ரசம் சொட்ட சொட்ட காதல் மயக்கத்துடன் மிகைப்படுத்தப்பட பாடல் வரியில் மோட்சம் அடைந்த ரசிகர்கள் ஏராளம்.

  மனதை வருடிய என்னவளே

  ஒரு காதலன், காதலி மீதான காதலை, இத்தனை அழகாக, இத்தனை நயமாக கூற முடியுமா என்றால், அந்த அத்தனை தேன் சொட்டும் வார்த்தைக்கும் சொந்தக்காரர் வைரமுத்து அவர்கள் தான். தொலைந்த இதயத்தை கால் கொலுசில் தேடும் அபரிமிதமான கற்பனை வரிகளில், என்னவளே... அடி என்னவேளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் என்ற வரிகளில் தொடங்கி "வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்" என்று இன்றும் இதயத்துக்கு இதமான பாடலாக மனதை வருடி வருகிறது.

  காலடியில் மண்டியிட்ட ரசிகர்கள்

  ஒரு படத்தின் போக்கை மாற்றி அமைத்த பெருமை வெண்ணிலவே.. வெண்ணிலவே பாடலுக்கு உண்டு. அந்த பாடலின் உச்சம் தொட்ட வரி என்றால் அது, ‘‘நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம், பாலூட்ட நிலவுண்டு" இந்த பாடலைக் கேட்டு, காதலையும் அதன் அடர்த்தி ஆழத்தையும் ரசித்து ருசித்த ரசிகர்கள் இன்றும் வைரமுத்துவின் காலடியில் மண்டியிட்டு கிடக்கிறார்கள். இந்த பாடலுக்கு தான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

  பாடலே அதிசயம்

  அதிசயங்கள் நிறைந்த ஜீன்ஸ் படத்தில் வரும் "பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசம்" என்ற பாடலே ஒரு அதிசயமாக மின்னியது திரையில். பெண்ணின் இடைக்கும் நடைக்கும் இத்தனை ஒப்புகையா, இத்தனை வர்ணனை வார்த்தைகளா என, அந்த பாடல் வரிகளை கேட்டு இளைஞர்கள் புரிந்தும் புரியாமலும் கவி பேரரசுவை வியந்து, வாய் பிளந்து போய்யுள்ளனர்.

  பட்டைத்தீட்டிய பாடல் வரிகள்

  ஜோடி படத்தில் நேசத்துடனும், பாசத்துடனும், மரியாதையுடனும், காதலை நயத்துடனும் கூறி, அந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டிய பாடல் "காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்" இந்த காதல் பாடலை கருப்பு வைரம் எவ்வாறு பட்டைத்தீட்டினார் என்று எண்ணிப்பார்க்கையில் மலைப்புத்தான் ஏற்படுகிறது. ஒருவர் மீதான காதலை அவரவர் பாணியில் வெளிப்படுத்துவதே காதலில் அழகு. அதை கச்சிதமாக தனது வரிகளால் செய்து முடித்து இருப்பார் வைரமுத்து.

  ஒரு சிறிய துளி

  "நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்" என்ற பாடல் இன்றும் இளமை குறையாமல் நெஞ்சை அள்ளுகின்றன. மனதை உசுப்பி உயிர் தொடும் பாடல் வரிகளை அலங்கார வார்த்தையால் பாட்டெழுதும் கவிஞன் 'வைரம்'முத்து. இரவின் நாயகன், தன் பாடலில் காதல், ஏக்கம், காமம், சோகம், வீரம் என அனைத்தையும் விரல் நுனியின் வழியே பேனாவில் புகுத்தி காகிதத்தில் பரவ விடும் கவி வித்தகர். பொங்கி பெருகும் கடலின் ஒரு சிறிய துளி தான் இங்கே பதியப்பட்டுள்ளது இன்னும் ஓராயிரம் வார்த்தை ஜாலம் மிச்சம் உள்ளது.

  English summary
  Here is a list of Vairamuthu's most favorite best lyrics.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X