»   »  மணிரத்னம் கோடுகள் போடுவார்.. நான் அவற்றை சித்திரமாக்குவேன்!- வைரமுத்து

மணிரத்னம் கோடுகள் போடுவார்.. நான் அவற்றை சித்திரமாக்குவேன்!- வைரமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணிரத்னம் தன் படத்துக்கான கோடுகளை மட்டும் வரைந்து காட்டுவார். நான் அவற்றை சித்திரமாக்கிக் கொள்வேன், என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

கடல் படத்துக்குப் பிறகு மணிரத்னம் உருவாக்கி வரும் காதல் கதை ஓ காதல் கண்மணி. துல்கர் சல்மான்-நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

ரோஜா முதல் ஓ காதல் கண்மணி வரை...

ரோஜா முதல் ஓ காதல் கண்மணி வரை...

மணிரத்னத்தின் ரோஜா முதல் ஓ காதல் கண்மணி வரை மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான்-வைரமுத்து கூட்டணி தொடர்கிறது. ‘ஓ காதல் கண்மணி' படம் குறித்தும், இயக்குனர் மணிரத்னம் குறித்தும் வைரமுத்து தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஆகா..

ஆகா..

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஓ.கே. கண்மணி' என்ற தலைப்பை முதலில் மணிரத்னம் என்னிடம் சொன்னபோது. ஆகா நன்றாக இருக்கிறதே என்று சொன்னேன். அவர் கதை சொல்கிற விதம், உங்களுக்கெல்லாம் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும்.

மூன்றே நிமிடங்களில்

மூன்றே நிமிடங்களில்

மணிரத்னம் தன்னுடைய எந்த கதையையும் மூன்று நிமிடங்களுக்கு மேல் எனக்கு சொன்னதில்லை. மூன்று நிமிடங்களில் விளக்க முடியாத கதை, கதையில்லை என்பது அவரது எண்ணம். அவருடைய வசனங்கள் கூர்மையாகவும், நறுக்கு தெரித்ததாகவும், சுருக்கமாகவும் இருப்பதைப்போலவே அவர் கதை சொல்லும் முறையும்.

கச்சிதமாக

கச்சிதமாக

எது தேவையோ, எந்த சொற்கள் மட்டும் தேவையோ அதை மட்டுமே பயன்படுத்துவார். ஆனால், அவர் சொல்லி முடித்திருக்கிற மிகச் சில நிமிடங்களில் முழுக் கதையும் என் மூளையில் வந்து தங்கிவிடும்.

கோடுகள்.. சித்திரங்கள்

கோடுகள்.. சித்திரங்கள்

இரண்டு பாத்திரங்கள், அவர்களுக்குள் ஒரு காதல், அவர்களுக்குள் ஒரு நிபந்தனை, அவர்களின் மனநிலை, எண்ண ஓட்டம், இவைகளைப் பற்றிய கோடுகளை மட்டும் வரைந்து காட்டுவார். சித்திரத்தை நான் வரைந்து கொள்ள வேண்டும். இதுதான் மணிரத்னத்தின் தனி பாணி என்று நினைக்கிறேன்.

வெற்றி பெறுவார்

வெற்றி பெறுவார்

‘ஓ.கே.கண்மணி' ஒரு அழகான காதல் களம். வழக்கமாக, மணிரத்னம் ஆடி களிக்கிற, ஆடத் துடிக்கிற, ஆடி ஜெயிக்கிற ஒரு களம். அந்த களத்தில் மீண்டும் அவர் விருப்பத்தோடு இறங்கியிருக்கிறார். இந்த களத்தில் அவர் வெற்றி பெறுவார்," என்றார்.

English summary
Lyricist Vairamuthu has shared his experience with Maniratnam in O Kadhal Kanmani.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil