வலிமை படத்துல நடிச்சிட்டு இது கூட முடியலையே.. பிரபல நடிகையை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கன்னட டிவி தொடர்களில் நடித்து வந்த இவர் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகை
பெங்களூருவை சேர்ந்த சைத்ரா ரெட்டி கன்னட டிவி தொடர்களில் நடித்து பிரபலமானார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான Rugged எனும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சைத்ரா ரெட்டி, தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் லீடு ரோலில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

11 லட்சம் ரசிகர்கள்
இன்ஸ்டாகிராமில் க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு டிரெண்டாக்கி வரும் சைத்ரா ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். சின்னத்திரை பிரபலங்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் இவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.

அஜித்துடன் இணைந்து
போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படத்தில் அவரது இன்டெலிஜன்ஸ் டீமில் அழகு பதுமையாக நடித்து அசத்தி இருப்பார். பியர்லி மானியுடன் செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தை வில்லனுக்கு அனுப்பி அவனுடைய நெட்வொர்க்கை ஹேக் செய்ய இவரை பணையம் வைக்கும் காட்சிகள் படத்தில் பக்காவாக உருவாக்கப்பட்டு இருக்கும்.

ஒரே ஷாட்ல முடியாது
இன்ஸ்டாகிராமில் வீடியோ ரீல்களை போட்டு டிரெண்ட் செய்து வரும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள கோலி சோடா வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோலி சோடாவை உடைக்க முடியாமல் கஷ்டப்பட்ட படியே பல முறை முயற்சி செய்து கடைசியில் ஓப்பன் செய்யும் சைத்ரா ரெட்டி, இதுவரை ஒரே ஷாட்ல ஓப்பன் பண்ணதே இல்லை என கேப்ஷன் போட்டிருந்தார்.
வலிமைல நடிச்சும் வேஸ்ட்
வலிமை படத்துல நடிச்சும் உங்களுக்கு ஒரு கோலி சோடாவை கூட ஓப்பன் பண்ண முடியலைன்னு வெளியே சொல்லாதீங்க, ஒரே வெட்கக்கேடா போயிடும் என அவரது ரசிகர்கள் செம ஜாலியாக ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், புதுசா கோலி சோடா விளம்பரத்துல நடிக்க ட்ரை பண்றீங்களா என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











