வலிமை,பீஸ்ட் ஒரே நாளில் மோதுகிறதா... பரபரக்கும் கோலிவுட்!

சென்னை : நேர்கொண்டபார்வை வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வினோத் மற்றும் அஜித்குமார் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ள இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வரும் விஜய் மற்றும் அஜீத்தின் திரைப்படங்கள் ஒருசேர உருவாகி வரும் நிலையில் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் முடிந்து இரண்டும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஹெச்.வினோத்

ஹெச்.வினோத்

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு வித்தியாச வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் நடிகர் அஜித்குமார் அதேசமயம் சமூகத்திற்கு தேவையான சில நல்ல கருத்துக்களைக் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரைப்படத்துறையில் இப்போதுள்ள ஹீரோக்கள் யாரும் ஒரே இயக்குனர் உடன் இணைந்து தொடர்ந்து 4 படங்களில் பணியாற்றியது இல்லை ஆனால் நடிகர் அஜித்குமார் சிறுத்தை சிவாவுடன் இணைந்து வீரம்,விவேகம், வேதாளம், விஸ்வாசம் என தொடர்ந்து நடித்த நான்கு படங்களும் ஹிட்டாகியுள்ளது. கமர்சியல் கதை களத்தில் உருவான இந்த திரைப்படங்களுக்கு அடுத்து இப்பொழுது ஹெச்.வினோத் உடன் இணைந்து அதே பார்முலாவை பின்பற்றி பணியாற்றி வருகிறார்.

பெண் சுதந்திரத்தை

பெண் சுதந்திரத்தை

சதுரங்கவேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வினோத் முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வினோத் மீது நம்பிக்கையை விதைத்தது. இதைத்தொடர்ந்து மூன்றாவதாக பிரபல ஹிந்தி படம் பிங்க் தமிழ் ரீமேக்கை இயக்கி அதிலும் ஹிட் அடித்தார். இந்தியில் அமிதாபச்சன் நடிப்பில் வெளியான பிங்க் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பியது. பெண்களைப் பற்றியும் பெண் சுதந்திரத்தைப் பற்றியும் அவர்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறும் இந்த திரைப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பு கொடுத்து வெற்றி படமாக்கியுள்ளனர்.

பைக் ரேஸிங் சீன்கள்

பைக் ரேஸிங் சீன்கள்

நேர்கொண்ட பார்வை வெற்றி பெற்றதை அடுத்து வினோத் அஜித் கூட்டணி மீண்டும் இணைந்து வலிமை படத்தில் பணியாற்றி வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வர சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பக்கா ஆக்சன் திரைப்படமாக உருவாகி வலிமையில் அஜித் பைக் ரேஸராகவும் அதே சமயம் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பி உள்ள நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யா செல்ல உள்ளது. அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டு இன்னும் சில பைக் ரேஸிங் சீன்கள் மட்டுமே இருப்பதால் விரைவில் ரஷ்யா சென்று இந்த காட்சிகளையும் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே விரைவில் வலிமை படத்தின் டீசர் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.

பீஸ்ட்

பீஸ்ட்

இதேபோன்று விஜய் நடிப்பில் பீஸ்ட் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இதுவரை பல விதமான கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தாலும் மாஸ்டர் திரைப்படத்தில் ஜேடி என்ற பெயரில் ப்ரொஃபஸர் கதாபாத்திரத்தில் செம ஸ்டைலிஷாக அதே மாஸ் உடன் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு சரிசமமாக வைக்கப்பட்ட திரைக்கதை லோகேஷ் கனகராஜின் புத்திசாலித்தனத்தை காட்டியுள்ளது. மாஸ்டரைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா வெற்றிக்குப் பிறகு நெல்சன் இயக்கியிருந்த டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் நீண்ட காலமாக ரிலீசாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவால் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் டாக்டர் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு தீவிரமாக ஆலோசித்து வந்தது, ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரசிகர்கள் டாக்டர் படத்தை திரையில் தான் காண வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒரே சமயத்தில் வெளியாகிறது

ஒரே சமயத்தில் வெளியாகிறது

டாக்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வர சிவகார்த்திகேயன், தனுஷ், செல்வராகவன் என மிகப் பெரிய பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு திரையரங்குகளை திறப்பதற்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் அனுமதி அளித்திருக்க தேக்கி வைக்கப்பட்டிருந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக உள்ளது . இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பீஸ்ட் மற்றும் வலிமை இரண்டும் ஒரே சமயத்தில் வெளியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் ஒரே சமயத்தில் வெளியானது. இப்பொழுது 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்-அஜித் படங்கள் ஒரே சமயத்தில் மோதிக் கொள்வது கோலிவுட்டை பரபரப்பாக்கிய உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X