வலிமை படத்தின் முதல் பாடல் ‘வேறமாறி‘… எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை : வலிமை திரைப்படத்தின் 'வேறமாறி' பாடலின் Lyrical வீடியோ இன்று வெளியாக உள்ளது.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அனிருத் பாடி உள்ளார்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் வழக்கறிஞரான நடித்திருந்தார் அஜித். மேலும், பெண்கள் உரிமைப்பற்றி பேசும் திரைப்படமாக அமைந்த இந்த திரைப்படம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்படமாக அமைந்தது.

ஹெச் வினோத் இயக்கத்தில்

ஹெச் வினோத் இயக்கத்தில்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி திரைப்படங்களை ஹெச். வினோத் இயக்கி இருந்தார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை திரைப்படத்தில் ஒன்றிணைந்தன.

ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்

ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்

இப்படத்தில், அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அஜித் இதற்கு முன்பாக மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்களிலும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அதே போல இந்த திரைப்படத்திலும் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்றும் படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை அஜித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என ட்ரெண்டாக்கினர்.

ஹூமா குரேஷி ஹீரோயின்

ஹூமா குரேஷி ஹீரோயின்

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை படத்தின் பெரும்பலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் , கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கியது.

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்

வலிமை படம் தொடங்கப்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து வலிமை படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் கேட்டனர். பாரத பிரதமர் சென்னை வந்த போதும், இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போதும், யூரோ கால்பந்து போட்டியில் இன்னும் ஒரு படி மேலே சென்று சாமியாரிடமும் வலிமை அப்டேட் கேட்டனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இதையடுத்து வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக் வெளியான சிறிது நேரத்திலேயே சர்வதேச அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

வேறமாறி பாடல்

வேறமாறி பாடல்

இந்நிலையில், வலிமை படத்தின் முதல் பாடலான வேறமாறி பாடலின் லிரிக் வீடியோ இன்று இரவு 10 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து வேறமாறி என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுத அனிருத் பாடியுள்ளார்.

தீபாவளிக்கு முன்பே

தீபாவளிக்கு முன்பே

வலிமை படத்தின் டீசரை வரும் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு முன்பே வெளியாகும் என்ற தகவல்களும் வேகமாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X