டுபுடுபுடுபு.. கும்முன்னு புல்லட் ஓட்டிய வனிதா.. அப்படியே ஸ்வீட் ஷாக்கான நெட்டிசன்கள்!

சென்னை : கடந்த சில ஆண்டுகளாகவே மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டவரா இருப்பவர் வனிதா விஜய்குமார். சமீபத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் எடுத்துக் கொண்ட திருமண ஃபோட்டோ இப்போ வரை ட்ரோல் செய்யப்படுகிறது.

Recommended Video

ஜாதகப்படி சீக்கிரம் நடக்கலாம் | Powerstar Srinivasan fun speech | pickup drop movie |Filmibeat Tamil

வனிதா என்ன செய்தாலும் அது சர்ச்சை, பரபரப்பு, டிரெண்டிங் என ஆகி விட்டது. பவர்ஸ்டார் உடன் எடுத்த ஃபோட்டோ பரபரப்பு அடங்குவதற்குள் பிரஸ் மீட்டில், 4 என்ன 40 கல்யாணம் கூட பண்ணுவேன்னு சொல்லி தெறிக்க விட்டார்.

வனிதா வெளியிட்ட செல்ஃபி

வனிதா வெளியிட்ட செல்ஃபி

இதைத் தொடர்ந்து திருமணக் கோலத்தில் ஃபோட்டோஷுட் நடத்தினார். இதுவும் வைரலானது. இந்நிலையில் இன்று காலை, பயங்கர மேக்அப்பில் பெரிய கூலிங் கிளாஷுடன், நெற்றியில் குங்குமம், புடவையில் எடுத்த செல்ஃபிக்களை வெளியிட்டார் வனிதா.

புல்லட் ஓட்டிய வனிதா

புல்லட் ஓட்டிய வனிதா

இதைத் தொடர்ந்து புடவை கட்டி, கெத்தாக பைக் ஓட்டுவது போன்ற வீடியோவையும் பகிர்ந்துள்ளார் வனிதா. அதுவும் சாதாரண பைக் இல்லை. ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக். கூட இரண்டு தாதாக்கள் வேறு பைக்கில் வருவது போல் கெத்தாக வருகிறார்.

பஞ்சாயத்து பரமேஸ்வரி

பஞ்சாயத்து பரமேஸ்வரி

என்ன விஷயம் என விசாரித்தால்,வனிதா நடிக்கும் புது படத்தில் வரும் காட்சியாம். அதற்காக தான் வனிதா பைக் ஓட்டி அசத்தி உள்ளார். மஞ்சக் காக்கா வெள்ள குருவி என்ற படத்தில் பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற லேடி தாதா கேரக்டரில் தான் வனிதா நடிக்கிறாராம். வனிதா தற்போது நடித்து வரும் பல படங்களில் இதுவும் ஒன்று.

மிரண்டு போன நெட்டிசன்கள்

மிரண்டு போன நெட்டிசன்கள்

இந்த வீடியோவை பலரும் பாராட்டியும், கலாய்த்தும் வருகின்றனர். சொர்ணாக்காவா என கேட்டு சிலர் கமெண்ட் செய்துள்ளனர். வனிதா பைக் ஓட்டும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலர் வியப்பாக பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X