»   »  திருவனந்தபுரத்திற்கு வந்த சன்னி லியோன்... உருகிய சீனா தானா நடிகர்

திருவனந்தபுரத்திற்கு வந்த சன்னி லியோன்... உருகிய சீனா தானா நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல மலையாள பத்திரிகையான வனிதாவின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்று நடனமாடிய சன்னி லியோனை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டதாம். ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபல சினிமா நட்சத்திரங்களும் சன்னி லியோனியுடன் போட்டி போட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் 'சீனா தானா' பாட்டுக்கு நடனமாடிய நடிகர் ஜெயசூர்யாவிற்கு சன்னி லியோனை நேரில் பார்த்த உடன் தனி மரியாதையே வந்து விட்டதாம்.

திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஞாயிறன்ற நடந்தது. இந்த விழாவில், முன்னணி நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர். விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி கூறி பாலிவுட்டின் கனவு கன்னிகளான சன்னிலியோன், பிபாஷா பாசு ஆகியோருக்கும் வனிதா பத்திரிகை நிர்வாகம் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

சன்னிலியோன் முதல்முறையாக திருவனந்தபுரம் வருவதை அறிந்து அவரைக் காண்பதற்காக ஆயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால், மிரண்டு போன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அவரை பாதுகாக்க மெனக்கெட வேண்டியிருந்ததாம்

விருது விழா

விருது விழா

விருது விழா என்றாலே சினிமா நட்சத்திரங்கள் திரண்டு வருவார்கள். அதுவும் நடிகர் நடிகையர்களின் நடன நிகழ்ச்சியும் இருக்கிறது என்றால் கேட்கவா வேண்டும், மலையாள சினிமா ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் திருவனந்தபுரத்தில் திரண்டு விட்டது.

ஹன்சிகா நடனம்

ஹன்சிகா நடனம்

சினிமா நட்சத்திரங்கள் விருது விழாவில் பிரபல நடிகை ஹன்சிகா நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது எல்லாம் சாதாரணமாகவே நடனத்தை ரசித்தனர் ரசிகர்கள்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

சன்னி லியோன் மேடையில் ஏறி நடனமாடத் தொடங்கியதும் ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டது. ரசிகர்களை கட்டுப்படுத்த விழா ஏற்பாட்டாளர்கள் அதிகம் சிரமப்பட்டுதான் போனார்களாம்.

நடிகர்களும் ஆர்வம்

நடிகர்களும் ஆர்வம்

சன்னிலியோனைக் காண்பதற்காக திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களில், பிரபல மலையாள நடிகரான ஜெயசூர்யாவும் ஒருவர். விழா மேடையில் சன்னிலியோனை அருகில் காண முடியாத விரக்தியில் இருந்த ஜெயசூர்யா, கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக மேடையின் பின்புறம் சென்றார்.

சன்னியுடன் செல்ஃபி

சன்னியுடன் செல்ஃபி

அங்கு அவருக்கு சர்ப்ரைஸ். தான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த சன்னிலியோன் அங்கிருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். ஜெயசூர்யாவுடன் விஜய் ஜேசுதாஸ் உட்பட சிலரும் சேர்ந்து கொள்ள, அனைவரும் சேர்ந்து சன்னிலியோனுடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டனர்.

சன்னிக்காகவே சென்றேன்

சன்னிக்காகவே சென்றேன்

இதுகுறித்து ஜெயசூர்யா தன் முகநூல் பக்கத்தில், "விழா மேடையில் சன்னியைப் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் வருத்தப் பட்டு மேடைக்கு பின்புறம் சென்றேன். அங்கு சன்னிலியோன் இருந்தார். அவர் வருகிறார் என்ற ஒரே ஒரு காரணத்துக்காவே நான் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்று இருந்தேன். என்னுடன் இரண்டு நிமிடங்கள் மட்டுமே சன்னிலியோன் பேசினார்.

அற்புதமான பெண்மணி

அந்த சந்திப்பு அவர் மீது எனக்கிருந்த பல தவறான எண்ணங்களை நீக்கி விட்டது. அவர் அற்புதமான குணங்கள் கொண்ட பெண்மணி. அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் சிறந்தவர். நான் உட்பட விழாவில் கலந்து கொண்ட மலையாள பிரபலங்களிடம் சன்னிலியோன் மிகுந்த மரியாதையாக நடந்து கொண்டார். பிறருக்கு நாம் அளிக்கும் மரியாதைதான், நமக்கான ஒரு கல்வித் தகுதி. அப்படிப் பார்த்தால் சன்னிலியோன் மிகுந்த படிப்பாளி என்றுதான் சொல்ல வேண்டும்" என்று சிலாகித்துள்ளார் ஜெயசூர்யா.

English summary
Vanitha-Cera Film Awards 2016 began at 6:30 p.m. at the Greenfield stadium at Karyavattom in Thiruvananthapuram Sunday, Feb. 21. The star-studded event was attended by almost all the celebrities of the Malayalam entertainment industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil