“பிக் பாஸ் வீட்டுக்கு நான் தான் பாஸ்“… வந்ததுமே வேலையை காட்டிய வனிதா !

சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது இதில் வந்ததுமே வனிதா தனது வேலையை காட்டத் தொடங்கி உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மணி நேரம் மட்டுமே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இந்த அல்டிமேட் இருபத்தி நான்கு மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், வனிதா, ஜூலி, நிரூப், தாமரை, தாடி பாலாஜி, சுருதி,அபிநய், அபிராமி, பாலாஜி முருகதாஸ்,சுரேஷ் சக்கரவர்த்தி, ஷாரிக், அனிதா சம்பத் என 14 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

வனிதா விஜயகுமார்.

வனிதா விஜயகுமார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக வனிதா விஜயகுமார் வந்தார். நேற்று சிவப்பு நிறுத்தில் ஒரு வித்தியாசமான உடையை அணிந்திருந்தார். மேலும் அதற்கு மேட்சாக வளையல், கம்மல் என பார்ப்பதற்கே அட்டகாசமாக இருந்தார் வனிதா.

நிச்சயம் வெற்றி பெறுவேன்

நிச்சயம் வெற்றி பெறுவேன்

கமலிடம் பேசிய வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சி என் வாழ்க்கையை மாற்றியது. முதலில் இந்த நிகழ்ச்சி என்ன என்பதை தெரிந்து கொள்ள பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன். ஆனால், இப்போது, இந்த நிகழ்ச்சி பற்றிய புரிதல் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் வெற்றி பெறுவேன், மீண்டும் இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி என்றார்.

ஆனந்த கண்ணீர்

ஆனந்த கண்ணீர்

இதைடுத்து . பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற வனிதா அந்த வீட்டை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார். செருப்பை கழட்டி விட்டு அந்த இடத்தை தொட்டு கும்பிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிதான் வனிதாவின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது. அதன்பின்பு திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வனிதா தற்போது கிட்டத்தட்ட10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Recommended Video

BB Ultimate வீட்டிற்குள் போகும் முன் Niroop செய்த கடைசி Video Call | BB Ultimate, Iykki Berry
நான் தான் பாஸ்

நான் தான் பாஸ்

நேற்று பாக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக அங்கிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டு, பிக்பாஸ் வீட்டுக்கு நான் தான் பாஸ் என கூறினார். இதைக்கேட்ட அபிராமி பிக் பாஸ் என்ன சொன்னாங்கனு கேட்டீங்களா? என்று கேட்க, அது பிக்பாஸுக்கே தெரியும், கமல் சாரே சொல்லிட்டாரு என வந்ததுமே தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார் வனிதா. இதற்கு ரசிகர்கள் நீ ஆரம்பிக்கா என்று கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X