»   »  முற்றும் மோதல்: விஷால் தரப்புக்கு எதிராக போலீசுக்கு போகும் வாராகி அன்ட் கோ

முற்றும் மோதல்: விஷால் தரப்புக்கு எதிராக போலீசுக்கு போகும் வாராகி அன்ட் கோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேங்காய் உடைத்த தங்களை தாக்கிய விஷால் தரப்பு மீது வாராகி தரப்பு போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை கொண்டாட விஷாலுக்கு சற்றும் ஆகாத நடிகர் வாராகி தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 11 மணிக்கு நடிகர் சங்க அலுவலகத்திற்கு வந்தார்.

Varahi to file police complaint against Vishal' supporters

சங்க வளாகத்தில் உள்ள வித்ய கணபதிக்கு 108 தேங்காய் உடைத்து கொண்டாடினார்கள் வாராகி மற்றும் அவரது ஆதரவாளர்கள். இதை பார்த்த விஷால் தரப்பு அவர்களுடன் மோதியது.

இதனால் தேங்காய் உடைத்த இடத்திலேயே கைகலப்பாகிவிட்டது. இந்நிலையில் தங்களை தாக்கிய விஷால் தரப்பு மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது வாராகி தரப்பு.

விஷால் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுக்கவே வாராகி தான் காரணம் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Varahi has decided to file police complaint against Vishal's supporters who attacked him today morning.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil