»   »  இங்கிதம் இல்லாதவர்களுடன் பணியாற்ற முடியாது: சமுத்திரக்கனி படத்தில் இருந்து வெளியேறிய வரலட்சுமி

இங்கிதம் இல்லாதவர்களுடன் பணியாற்ற முடியாது: சமுத்திரக்கனி படத்தில் இருந்து வெளியேறிய வரலட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது என்று கூறி ஆகாச மிட்டாயீ படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

சமுத்திரக்கனி இயக்கி, நடித்த அப்பா படத்தை மலையாளத்தில் ஜெயராமை வைத்து ஆகாச மிட்டாயீ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்தனர்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிப்பதை நினைத்து வரலட்சுமி மகிழ்ச்சியாக இருந்தார்.

ஜெயராம்

ஜெயராம்

நான் ஜெயராம் சாரின் தீவிர ரசிகை. அவருடன் சேர்ந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமி தெரிவித்திருந்தார்.

வரலட்சுமி

வரலட்சுமி

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயராமுடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்த வரலட்சுமி அந்த படத்தில் இருந்து திடீர் என விலகியுள்ளார்.

தயாரிப்பாளர்கள்

ஆகாச மிட்டாயீ படத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை வரலட்சுமி தெரிவித்துள்ளார். இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது. என் முடிவை ஆதரித்ததற்கு சமுத்திரக்கனி சார் மற்றும் ஜெயராம் சாருக்கு நன்றி என்று ட்வீட்டியுள்ளார் வரு.

பெண்கள்

பெண்கள்

பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் வரலட்சுமி சேவ் சக்தி என்ற இயக்கத்தை துவங்கியுள்ளார். இந்நிலையில் அவர் ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்கள் பற்றி துணிச்சலாக ட்வீட்டியுள்ளார்.

English summary
Varalakshmi Sarathkumar has tweeted that, 'Thnk u to Samuthirakani sir n Jayaram sir for hvng supported my decision.. can't work wid male chauvinists n mannerless'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil