»   »  சரத்குமாருக்கும், எனக்குமான மோதலுக்கு வரலட்சுமி காரணமல்ல- விஷால்

சரத்குமாருக்கும், எனக்குமான மோதலுக்கு வரலட்சுமி காரணமல்ல- விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் இடையிலான மோதலுக்கு சரத்குமாரின் மகள் வரலட்சுமி தான் காரணம் என்று பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கும் சரத்குமாருக்கும் இடையிலான மோதலுக்கு வரலட்சுமியும் நானும் கொண்டிருக்கும் நட்பு காரணமல்ல என்று விஷால் தெரிவித்து இருக்கிறார்.

Varalaxmi is not for the cause conflict between me and sarathkumar - says Vishal

நாங்கள் இருவரும் பண்பட்ட நிலையில் இருக்கிறோம். அதனால் எனக்கும், வரலட்சுமிக்கும் இடையிலான நட்பை நடிகர் சங்கத் தேர்தல் பாதிக்காது.

அவர்கள் என்னை ஜாதிப் பெயரை சொல்லி பேசியதுதான் என்னை மிகவும் பாதித்து விட்டது என்று இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார் விஷால்.

மேலும் நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன, வேலைகள் நிறைய இருக்கின்றன. வேலைகளை விரைவாக முடிப்பதற்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகின்றது என்றும் கூறியிருக்கிறார்.

English summary
Nadigar Sangam Election 2015: Vishal Says in Recent Interview "Varalaxmi is not for the cause conflict between me and sarathkumar". He took and wrote on twitter "Ughhhhh. Dis viral fever..lotsa work. Few more days.hang in Der.Need more energy".
Please Wait while comments are loading...