Don't Miss!
- News
பரந்தூர் ஏர்போர்ட் உறுதி.. பிரச்சனையை தமிழ்நாடு அரசுதான் தீர்க்கனும்: மத்திய அமைச்சர் சிந்தியா
- Technology
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Sports
சுப்மன் கில் தான் தொடக்க வீரர்..ராகுல் அந்த பணியை செய்ய மாட்டாரா? முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிம்ரன், ஜோதிகாவை குதிரைங்கன்னு சொன்னாரா விஜய்? வாரிசு நடிகர் ஷாம் பேட்டியால் வெடித்த சர்ச்சை!
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வரும் நடிகர் ஷாம் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நடிகைகள் சிம்ரன் மற்றும் ஜோதிகாவை நடிகர் விஜய் குதிரைங்கன்னு சொன்னார் என அவர் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து விளாசி வருகின்றனர்.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரனாக ஷாம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உயரமான நடிகையின் கட்டுப்பாட்டில் இருந்த வாரிசு நடிகர்..சீக்ரெட்டா பிரச்சனையை தீர்த்த அப்பா!

துணிவுக்குப் பின் வாரிசு
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களுமே ஒரே நாளில் நேரடியாக மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாரிசு படம் ஜனவரி 12ம் தேதியும் அஜித்தின் துணிவு படம் அதற்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 11ம் தேதியே வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாளே அதிக வசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக துணிவு ஒரு நாள் முன்னதாக வெளியாக உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

போட்டா போட்டி பேட்டி
துணிவு படம் பற்றி இயக்குநர் ஹெச். வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் என அந்த படத்தை ப்ரமோட் செய்ய பேட்டி அளித்து வருகின்றனர். இன்னொரு புறம் வாரிசு படம் குறித்து அதில் நடித்துள்ள நடிகர் ஷாம் அளித்துள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது. துணிவு மற்றும் வாரிசு கிளாஷ் குறித்து விஜய் சொன்ன விஷயம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

நண்பர் படமும் வரட்டும்
அண்ணா துணிவு படமும் பொங்கல் ரிலீஸ்னு சொல்லிட்டாங்க என ஷாம் போன் போட்டு பேசியதுமே.. டேய் நல்ல விஷயம் தானே.. அவரும் நம்ம நண்பர் தானே.. ரெண்டு படமும் வரட்டும் ரெண்டும் நல்லா ஓடும் என விஜய் சொன்னதாக ஷாம் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது ஷாம் விஜய் பேசியதாக சொல்லி உள்ள இன்னொரு விஷயம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரெண்டு குதிரைங்க
விஜய்யின் குஷி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷாம் 12 பி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் ஷாமுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் சிம்ரன் நடித்திருந்தனர். அந்த சமயத்தில் ஷாமிடம் பேசிய நடிகர் விஜய் யாருடா நீ.. வரும்போதே ரெண்டு குதிரங்க சிம்ரன், ஜோதிகாவை ஓட்டிட்டு வரன்னு கேட்டார் என்று பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அஜித் ரசிகர்கள் விளாசல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான சிம்ரன் மற்றும் ஜோதிகாவை நடிகர் விஜய் ஆஃப் ஸ்க்ரீனில் எப்படி பேசலாம் என அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து விளாசி வருகின்றனர். இதன்மூலம் சமூக வலைதளங்களில் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை வெடித்துள்ளது.

விஜய் ரசிகர்கள் பதிலடி
நடிகை ஹீராவுக்கும் அஜித்துக்கும் இடையே ஏற்பட்ட காதல் கிசுகிசுகளை வைத்தும், மங்காத்தா படத்தில் அஜித் கெட்டவார்த்தை பேசும் வசனத்தை ஷேர் செய்தும் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். நடிகர் ஷாம் ஓப்பனாக பேசுகிறேன் என உளறிவிட்டார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.