Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
‘வாரிசு‘ இசைவெளியீட்டு விழா..ரசிகர்கள் தள்ளுமுள்ளு..போலீஸாருக்கு காயம்..களேபரமான நேரு ஸ்டேடியம்!
சென்னை : வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு, டிக்கெட் இல்லாமல் உள்ளே நுழைய முயன்ற ரசிகர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியே களேபரமானது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார்
விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
என்னடா
பித்தலாட்டம்
இது..
நடிகர்களையே
ஏமாற்றிய
அஜித்
போட்டோ
எடிட்..
வச்சு
செய்யும்
விஜய்
ஃபேன்ஸ்!

ஹிட்டான பாடல்கள்
வாரிசு படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் இருந்து ரஞ்சிதமே...ரஞ்சிதமே பாடலும், தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடல்கள் இணையத்தில் மாஸ் காட்டி வருகின்றன.

வாரிசு இசைவெளியீட்டு விழா
இந்நிலையில்,வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா, நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபனா, சரத்குமார், எஸ்.ஜே. சூர்யா அகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்னர்.

விஜய் என்ன பேசுவார்
மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு விஜய் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. பீஸ்ட் படம் வெளியான போதும் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு வாரிசு இசை விழாவில் விஜய் கலந்து கொள்வதால் இவர் என்ன பேச போகிறார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

களேபரமான நேரு ஸ்டேடியம்
இந்நிலையில், வாரிசு இசைவெளியீட்டு விழாவிற்கு டிக்கெட்டுகள் இல்லாமல் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்குள் நுழைய முயன்ற ரசிகர்களை போலீசார் தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதலில் காவல்துறையினர் சிலர் காயம் அடைந்தனர். இதையடுத்து, ரசிகர்களை விரட்டி அடித்து நேரு ஸ்டேடியத்தை பூட்டினர். இதனால், அந்த பகுதியே சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.