Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காப்பி ஸ்டாரா? அன்போ.. அடியோ.. அச்சச்சோ அந்த வசனமும் ரஜினியோட வசனமாமே.. கிளம்பிய ட்ரோல்கள்!
சென்னை: வாரிசு படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்புகள் வெளியாகி ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற அந்த கேட் சீன் முதல் விஜய் பேசும் அன்போ.. அடியோ.. வசனம் வரை எல்லாமே ரஜினி படத்தில் இருந்து காப்பி அடித்தது தான் என ரஜினி ரசிகர்கள் கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு ஒன் ஒன்.. நம்பர் ஒன் என பேசியதும், சரத்குமார் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என சொன்னதும் ரஜினி ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அதே போல பத்திரிகையாளர் பிஸ்மி நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என பேசி ரஜினி ரசிகர்களிடம் நல்லாவே வாங்கிக் கட்டிக் கொண்டார்.
துணிவை விடாமல் துரத்தும் வாரிசு.. ஒரே நாளில் ரிலீஸ்.. பொங்கலுக்கு பெரிய சம்பவம் இருக்கு போல!

20 மில்லியன் வியூஸ்
வாரிசு படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில், இதுவரை 20 மில்லியன் வியூஸை ரியல் டைமில் கடந்து அசத்தி வருகிறது. இன்று மாலை 5 மணிக்குள் 30 மில்லியன் வியூஸை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லைக்ஸ் பொறுத்தவரையில் இப்பவே 1.7 மில்லியன் லைக்ஸ் அள்ளி துணிவு லைக்ஸ் சாதனையை துவம்சம் செய்துள்ளது.

கேட் சீன்
ரஜினிகாந்தின் லேண்ட்மார்க் சீனான கேட் திறந்து கொண்டு செல்லும் காட்சி போலவே வாரிசு ட்ரெய்லரிலும் ஒரு சீன் செம மாஸாக உள்ளது. அதை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் இதுவும் எங்க கிட்ட இருந்து சுட்டது தான் என கலாய்த்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் சர்ச்சை பெரிதான நிலையில், தொடர்ந்து நடிகர் விஜய்யை ட்ரோல் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

அன்போ.. அடியோ
வாரிசு படத்தில் பிரகாஷ் ராஜிடம் நடிகர் விஜய் மாமே அன்போ.. அடியோ.. எனக்கு கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சு கொடு.. ஏன்னா நான் அதை விட ட்ரிப்பிளா திருப்பிக் கொடுப்பேன் என பேசும் பஞ்ச் வசனம் விஜய் ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கே கொண்டு சென்றது. ஆனால், அந்த வசனமும் எங்களுக்குத்தான் சொந்தம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதாரத்துடன் வந்து நிற்கின்றனர்.
|
ரஜினி பட வசனம்
பணக்காரன் படத்தில் ரஜினிகாந்த் எதிரிகளிடம் பேசும் போது.. நான் முதல்ல எல்லாத்தையும் வாங்கிப்பேன்.. அப்புறம் தான் திருப்பிக் கொடுப்பேன்.. அன்பும் சரி.. அடியும் சரி என பேசும் வசனத்தை தான் பட்டி டிக்கெரிங் பண்ணி விஜய் வாரிசு படத்தில் பேசியுள்ளார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

காப்பி ஸ்டார்
விஜய் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் ஆரம்பத்தில் இருந்து ரஜினிகாந்த் படங்களையும் அவரது ஸ்டைலையும் காப்பி அடித்து வந்தவர் தான் என்றும் இப்போ கூட அவருக்குள் இருக்கும் அந்த ஃபேன் பாய் மாறாமல் இருப்பதை அவரது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதை விடுத்து தளபதி என்பது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கும் மேலே என சொல்லக் கூடாது என ரஜினிகாந்த் ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.