Varisu: விஜய்க்கு இணையாக ஆட நினைத்த ராஷ்மிகா மந்தனா.. அதுவே கழண்டு விழுந்துடுச்சு!

சென்னை: வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே 10 மில்லியன் வியூக்களை கடந்து அடுத்தடுத்த சாதனைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

ரோகிணி உள்ளிட்ட சில பிரபல தியேட்டர்களில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் இப்பவே தியேட்டரை தெறிக்க விட்டுள்ளனர்.

இந்நிலையில், விஜய்க்கு இணையாக ஆட நினைத்து ராஷ்மிகா மந்தனா முயற்சிக்க அவருக்கு நடந்த விஷயம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

புஷ்பாவுக்கும் மேல

புஷ்பாவுக்கும் மேல

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வரும் சாமி சாமி பாடலிலேயே காட்டுத்தனமான கவர்ச்சியை காட்டி அல்லு அர்ஜுன் உடன் இணைந்து முடிந்த வரை டஃப் கொடுத்து நடனமாட முயற்சித்து இருப்பார் ராஷ்மிகா மந்தனா. அதைவிட ஒரு படி மேலே ரஞ்சிதமே பாடலில் தனது ஃபுல் எஃபோர்ட்டை போட்டு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

ரஞ்சிதமே ராஷ்மிகா தான்

ரஞ்சிதமே ராஷ்மிகா தான்

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விஜய்யை புகழ்ந்து பாடப்படும் இன்ட்ரோ பாடலாக இல்லாமல், அரபிக் குத்து போல ஹீரோயின் உடன் குத்தாட்டம் போடும் பாடலாகவே அமைந்துள்ளது. ரஞ்சிதமே என விஜய் கொஞ்சி பாடுவதே ராஷ்மிகாவைத்தான் என்பதால் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

தெலுங்கு சாயல்

தெலுங்கு சாயல்

மகேஷ் பாபுவின் ரா ரா ரமேஷா, மொச்சக்கட்ட பல்லழகி உள்ளிட்ட பாடல்களில் சாயல் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் கிளம்பினாலும், ரசிகர்கள் தியேட்டரில் ஸ்க்ரீன் அருகே சென்று குத்தாட்டம் போடுவதற்கான சரியான பாடலாகவே ரஞ்சிதமே அமைந்துள்ளது. ஏகப்பட்ட ரீல்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் போட ஆரம்பித்துள்ளனர்.

விஜய்க்கு இணையாக

விஜய்க்கு இணையாக

ஒரு கட்டத்தில் விஜய்க்கு இணையாக ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. உதடு வலிக்க கொஞ்சணுமே வரிகளுக்கு ராஷ்மிகா மந்தனா ஆட்டம் போட நினைத்த நிலையில், அவரையே அறியாமல் நடந்த ஒரு மைனியூட்டான விஷயத்தையும் ரசிகர்கள் நோட் செய்து கமெண்ட் போட்டு வருகின்றனர். இயக்குநரே பார்த்து விட்டு அடுத்த ரீடேக் எடுக்காமல் விட்டு விட்டாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

கழண்டு விழுந்த கொலுசு

கழண்டு விழுந்த கொலுசு

விஜய்க்கு ஈக்வலாக குத்தாட்டம் போட இறங்கி ஆடிய ராஷ்மிகா மந்தனாவின் ஒற்றை கால் கொலுசே கழண்டு விழுந்து விட்டது. ஆனால், அந்த ஷாட் நல்லா இருந்த நிலையிலும், மறுபடியும் அதுக்காக மீண்டும் ஆட வைக்க வேண்டாம் என்றும் நினைத்து விட்டார்களோ என்னவோ லிரிக் வீடியோவில் அந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நீங்க அதை கவனிக்கவில்லை என்றால், கொஞ்சம் ஸ்லோ பண்ணி மீண்டும் ரஞ்சிதமே பாடலை பாருங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X