Don't Miss!
- News
20+17+6.. திமுக போட்ட அதிரி புதிரி கணக்கு.. எனக்கு பின்னால் ஆள் இருக்கிறார்கள்.. எடப்பாடி "அஸ்திரம்"
- Sports
வீதிக்கு வந்த மைக்கேல் கிளார்க்கின் கள்ளக் காதல்.. நடுரோட்டில் அறைந்த மனைவி.. என்ன நடந்தது?
- Finance
தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு!
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
Varisu Second Single: விஜய் ஸ்வாக்.. சிம்பு வாய்ஸ்.. ரசிகர்களின் தேசிய கீதமான ’தீ தளபதி’.. வேறலெவல்!
சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான 'தீ தளபதி' தற்போது வெளியாகி உள்ளது.
தமன் இசையில், விவேக் வரிகளில் உருவாகி உள்ள இந்த பாடலை நடிகர் சிம்பு வெறித்தனமாக பாடி உள்ளார்.
தளபதி ரசிகர்களின் புதிய தேசிய கீதமாகவே 'தீ தளபதி' பாடல் தற்போது மாறி உள்ளது.
தீ
தளபதி..
பெயரை
கேட்டாலே
சும்மா
அதிருதே..
வாரிசு
செகண்ட்
சிங்கிள்
எப்போ
ரிலீஸ்
தெரியுமா?

வாரிசு செகண்ட் சிங்கிள்
கார்த்தியின் தோழா படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் வாரிசு. முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 'தீ தளபதி' பாடல் வெளியாகி உள்ளது.

தெறிக்கும் தீ தளபதி
ரஞ்சிதமே பாடலில் அந்த கடைசி ஒரு நிமிட பீட்டுக்கே இசையமைப்பாளர் தமனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், தற்போது தளபதி ரசிகர்களின் தேசிய கீதமாகவே இந்த 'தீ தளபதி' பாடலை போட்டு தெறிக்கவிட்டுள்ளார் தமன். லிரிக் வீடியோவில் காட்டப்படும் விஜய்யின் காட்சிகள் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்துள்ளது.

சிம்பு வாய்ஸ் அண்ட் டான்ஸ்
வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடலை நடிகர் விஜய் பாடியிருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள தீ தளபதி செகண்ட் சிங்கிளை நடிகர் சிம்பு தனது வெறித்தனமான குரலில் பாடி ஆடி அசத்தி உள்ளார். சிம்புவுடன் இணைந்து சாண்டி மாஸ்டர் நடனம் ஆடி உள்ளார். தனது படங்களை தாண்டி மற்ற நடிகர்களின் படங்களுக்கும் சிம்பு பாட்டு பாடி வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனது நண்பர் மகத்துக்காக இந்தி பாடல் ஒன்றை பாடி இருந்தார்.

விஜய் ஸ்வாக்
பாஸ் இஸ் ரிட்டர்ன்ஸ் என்பதற்கு ஏற்றார்போல வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிளான தீ தளபதி பாடலில் நடிகர் விஜய்யின் காட்சிகள் எல்லாமே தியேட்டரில் ரசிகர்கள் விசிலடித்து வாய் வலிக்கும் அளவுக்கு இருக்கப் போவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் வ்ஜய்யின் ஸ்வாக் மரண மாஸ் காட்டுகிறது.

30 இயர்ஸ் ஆஃப் விஜய்யிஸம்
நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில், #3DecadesOfVIJAYism ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்த பாடலை வாரிசு படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வரும் பொங்கலுக்கு தியேட்டரில் விஜய் ரசிகர்களுக்கு வாரிசு ட்ரீட் காத்துக் கொண்டிருப்பது கன்ஃபார்ம்.

இது திருப்பிக் கொடுக்கும் நேரம் மாமே
"Its Time to give it back Maame" என்றும் இது திருப்பிக் கொடுக்கும் நேரம் என பீஸ்ட் பட சொதப்பலுக்கும் அதன் பின்னர் வெளியான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள தீப்பிடிக்கும் லிரிக்ஸ் விஜய் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.