Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
Varisu vs Thunivu: 2வது வாரத்திலும் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளிய வாரிசு.. வசூல் விவரம் இதோ!
சென்னை: விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகின. பொங்கல் பண்டிகை வின்னர் யார் என்கிற ஆர்வத்தில் இருந்த ரசிகர்களுக்கு கடந்த வாரம் அதிக வசூல் உடன் நம்பர் ஒன் இடத்தை நடிகர் விஜய் பிடித்தார்.
வாரிசு படத்திற்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் பரவிய நிலையில், இரண்டாவது வாரம் படமே ஓடாது என அஜித் ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில், 2வது வாரத்திலும் விஜய்யின் வாரிசு படம் தான் வசூல் ரீதியாக முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை வாரிசு படக்குழுவினர் 7 நாட்களில் படம் 210 கோடி வசூல் செய்தது என்றும் வெற்றி விழாவையும் அதிகாரப்பூர்வமாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
வாரிசு சக்சஸ் மீட்…படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய விஜய்!

வாரிசு வசூல்
இதுவரை தமிழ்நாட்டிலும் உலகளவிலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 225 முதல் 230 கோடி வரை வாரிசு படத்தின் வசூல் சனிக்கிழமை கலெக்ஷன் உடன் உள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை வாரிசு படத்திற்கு மிகப்பெரிய அளவில் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருவதாக பல திரையரங்குகளே அறிவித்துள்ளன.

வெற்றி கொண்டாட்டம்
வாரிசு படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மட்டுமின்றி படத்தின் வெற்றி கொண்டாட்டத்தையும் தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்பாடு செய்திருந்தார். இயக்குநர் வம்சி, நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

2வது வாரத்திலும் வெற்றி
பொங்கல் வாரத்திலேயே அஜித்தின் துணிவு திரைப்படத்தை வசூல் ரீதியாக தமிழ்நாட்டிலும் உலகளவிலும் நடிகர் விஜய் முந்திய நிலையில், 2வது வாரத்திலும் வாரிசு படம் தான் வசூல் ரீதியாக முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2ம் இடத்தில் துணிவு
எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படமும் பொங்கல் விடுமுறையை தொடர்ந்து இந்த வாரமும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வேறு எந்த பெரிய படமும் வெளியாகாத நிலையில், அடுத்த வாரமும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் வசூல் வேட்டை ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் விஜய்யின் வாரிசு திரைப்படம் 140 கோடி ரூபாயையும் துணிவு திரைப்படம் 105 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்தில் வாரிசு வசூல்
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விஜய்யின் வாரிசு திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்தில் 10 நாட்களில் 8.07 கோடி ரூபாய் வசூலை விஜய்யின் வாரிசு திரைப்படம் அள்ளி உள்ளதாக இங்கிலாந்தில் வாரிசு படத்தை வெளியிட்ட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.