Don't Miss!
- News
"பிஜேபி B டீம்".. நாம் தமிழர் கட்சி "மேனகா"வின் கணவர் பாஜக நிர்வாகியா.. நவநீதன் ஆவேச மறுப்பு.. பரபர
- Technology
ரூ.16,000-க்கு கீழ் அசத்தலான 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொங்கலுக்கு இல்லை.. புத்தாண்டுக்கே பெரிய போட்டி காத்திருக்கு.. வாரிசு, துணிவு டிரைலர் வருது!
சென்னை: கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ள நிலையில், வரும் பொங்கல் போட்டியை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஆனால், அதற்கு முன்பே வரும் புத்தாண்டுக்கு வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு இடையே மிகப்பெரிய கிளாஷ் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆம்.. விஜய்யின் வாரிசு படத்தின் டிரைலர் மற்றும் அஜித்தின் துணிவு பட டிரைலர் இரண்டுமே புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதிக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் ரூட்டு நமக்கு வேண்டாம்... ரசிகர்களுடன் சூர்யா எடுத்த அதிரடி முடிவு...

துணிவு டே
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களுக்கு இல்லாத அளவு இந்த முறை துணிவு படத்துக்கு மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் பணிகளை படத்தை வாங்கியுள்ள லைகா நிறுவனம் ஆரம்பித்துள்ளது. வான்வெளியில் துணிவு போஸ்டரை பறக்கவிட்ட நிலையில், அடுத்து புர்ஜ் கலிஃபாவில் டிசம்பர் 31ம் தேதி பெரிய சம்பவம் பண்ண காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவு டிரைலர்
அதே போல அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, பாவனி, அமீர், சிபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 31ம் தேதி வெளியாகி புத்தாண்டு ட்ரீட்டாக அஜித் ரசிகர்களுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு டிரைலரும் வருது
வாரிசு இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், வரும் டிசம்பர் 31ம் தேதி வாரிசு படத்தின் டிரைலரை ஐதராபாத்தில் பெரிய விழாவே நடத்தி வெளியிட தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரிசு ஆடியோ லாஞ்ச் விழாவும் சன் டிவியில் நியூ இயர் ஸ்பெஷல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்கது.

நியூ இயர் கிளாஷ்
வரும் பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு படங்கள் போட்டி போட உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வரும் நியூ இயர் 2023க்கு வாரிசு டிரைலர் மற்றும் துணிவு டிரைலர் இரண்டுக்கும் இடையே பெரும் போட்டி நிலவ உள்ளது குறிப்பிடத்தக்கது. டிரைலர் வெளியானாலே எந்த படம் பாக்ஸ் ஆபிஸை ஆக்கிரமிக்கும் என்பதை பாதி கணித்து விடலாம் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பாடல்களில் வாரிசு முன்னிலை
இதுவரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் பாடல்கள் வெளியாகி உள்ளன. யூடியூப் வியூஸ் ரெக்கார்டு சாதனையில் வாரிசு பட பாடல்கள் துணிவு படத்தை தூக்கி சாப்பிட்டு விட்டது. அடுத்து புத்தாண்டுக்கு வெளியாக உள்ள டிரைலர் மோதல் எப்படி இருக்கப் போகுது என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்!