Varisu box office worldwide: கட்டுக்கடங்காத விஜய் ரசிகர்கள்... 200 கோடி வசூலை நெருங்கிய வாரிசு

சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
முதன்முறையாக வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வாரிசு வெளியான முதல் நாளில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.இந்நிலையில் தொடர்ச்சியான பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்தப் படத்தின் கலெக்‌ஷன் மேலும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பொங்கல் வின்னர் வாரிசு

பொங்கல் வின்னர் வாரிசு

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார், தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். பக்கா ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக வெளியான வாரிசு படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளில் 20 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

 படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையில் பாடல்களும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்தன. இந்நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் 11ம் தேதி ரிலீஸானது. இதனால் விஜய்யின் வாரிசு - அஜித்தின் துணிவு என்ற போட்டி ஏற்பட்டது. இதனிடையே வாரிசு திரைப்படம் முதல் 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 தொடரும் வரவேற்பு

தொடரும் வரவேற்பு

வாரிசு, துணிவு என இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அதேநேரம் இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால், அடுத்தடுத்த நாட்களில் டிக்கெட் புக்கிங் கொஞ்சம் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. ஆனால், கடைசி மூன்று தினங்களும் பொங்கல் விடுமுறை என்பதால் மீண்டும் டிக்கெட் புக்கிங், வசூல் இரண்டும் சூடு பிடித்துள்ளது. சென்னையின் பல திரையரங்குகளில் பொங்கல் விடுமுறை முடிந்த பின்னரும் கூட பல காட்சிகள் ஹவுஸ்புல்லாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

 200 கோடி பாக்ஸ் ஆபிஸ்

200 கோடி பாக்ஸ் ஆபிஸ்

வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 80 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வாரிசுடு என்ற டைட்டிலில் வெளியான இந்தப் படம், அங்கு 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளதாம். மொத்தமாக உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அஜித்தின் துணிவு திரைப்படமும் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், தற்போது விஜய்யின் வாரிசும் 200 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு படங்களின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X