Don't Miss!
- News
பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் சேலையில் மயில், தாமரை! பரிசாக தந்தது யார் தெரியுமா? சிறப்புகள் என்ன?
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Varisu box office worldwide: 5 நாட்களில் 150 கோடி... இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்
சென்னை: ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வாரிசு திரைப்படம் 11ம் தேதி வெளியானது.
வம்ஷி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தமிழை தொடர்ந்து தெலுங்கில் வாரிசுடு என்ற டைட்டிலிலும் இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொங்கல் விடுமுறைகளை முன்னிட்டு மீண்டும் வேகமெடுத்து வாரிசு கலெக்ஷன் 150 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“வாரிசு“
படம்
பார்த்து
கண்கலங்கிய
வம்சியின்
தந்தை…
மிகப்பெரிய
சாதனையே
இதுதான்
நெகிழ்ந்த
வம்சி!

இனிதான் ஆட்டம் ஆரம்பம்
பீஸ்ட்டை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான வாரிசு படத்துக்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. முதன்முறையாக வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவானது. தில் ராஜூவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் கடந்த 11ம் தேதி தமிழ் வெர்ஷனான வாரிசு வெளியானது. அதனைத் தொடர்ந்து 14ம் தேதியன்று தெலுங்கில் வாரிசுடு என்ற டைட்டிலில் வாரிசு ரிலீஸானது. மேலும் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

அதிகரிக்கும் 5ம் நாள் வசூல்
பேமிலி சென்டிமெண்ட் ஜானரில் உருவாகியுள்ள வாரிசு படத்தில், விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தமன் இசையமைத்துள்ளார். 11ம் தேதி வெளியான இந்தப் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 20 முதல் 23 கோடி ரூபாய் வசூலித்தது. உலகம் முழுக்க 44 முதல் 47 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்ததாக சொல்லப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் கொஞ்சம் டல்லடித்த வாரிசு வசூல், பொஙல் விடுமுறையில் மீண்டும் அதகளம் செய்து வருகிறதாம்.

பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி
இரண்டாவது நாளில் உலகம் முழுக்க 21 கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் மொத்தமாக ரூ.17 கோடி வரையும் கலெக்ஷன் செய்துள்ளது வாரிசு. நான்காவது நாளில் 24 முதல் 26 கோடி ரூபாய் வசூல் கிடைத்ததாக சொல்லப்பட்டது. இதனால் முதல் நான்கு நாட்களில் 100 கோடி வசூலை கடந்தது. இந்நிலையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் 5ம் நாளில் மட்டும் வாரிசு திரைப்படம் 30 முதல் 32 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இனிதான் ஆட்டம் ஆரம்பம்
இதன் காரணமாக வாரிசு திரைப்படம் முதல் 5 நாட்களில் 152 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் முதல் மூன்று நாட்கள் வரை விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற வாரிசு, தற்போது பொதுமக்களிடமும் கனெக்ட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தெலுங்கு வெர்ஷனான வாரிசுடு, இந்தி டப்பிங்கிலும் வாரிசு திரைப்படம் செம்மையாக ஸ்கோர் செய்து வருகிறதாம். இந்த வாரமும் வாரிசு கலெக்ஷன் அதிகரிக்கும் எனவும், அதன்மூலம் வார இறுதிக்குள் 200 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.