»   »  மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா: ட்வீட் செய்த த்ரிஷாவின் மாஜி மாப்பிள்ளை

மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா: ட்வீட் செய்த த்ரிஷாவின் மாஜி மாப்பிள்ளை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மயக்கமா கலக்கமா பாடல் வரிகள் குறித்து த்ரிஷாவின் முன்னாள் மாப்பிள்ளை வருண் மணியன் ட்வீட் செய்துள்ளார்.

த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை பிரிந்த வேகத்தில் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியன் மீது காதல் வயப்பட்டார். காதல் மலர்ந்த வேகத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் நடந்த சூட்டோடு த்ரிஷாவும், வருண் மணியனும் பிரிந்துவிட்டனர்.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. இதனால் உடனே திருமணத்தை நடத்த வேண்டும் என்ற வருண் மணியன் வீட்டாரின் கோரிக்கை அவர் ஏற்கவில்லை. இது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

ட்விட்டர்

ட்விட்டர்

திருமணம் நிச்சயம் ஆன பிறகு த்ரிஷாவின் ட்வீட்களை வருணும், வருணின் ட்வீட்களை த்ரிஷாவும் ரீட்வீட் செய்து வந்தனர். தற்போது அது எல்லாம் நின்றுவிட்டது.

மயக்கமா கலக்கமா

த்ரிஷாவுக்கும் வருணுக்கும் இடையே ஒரு மாதமாக பேச்சு இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருண் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எனக்கு பிடித்த பாடல் மயக்கமா கலக்கமா. அதில் வரும் வரி உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஜெய்

ஜெய்யை வைத்து வருண் மணியன் தயாரித்து வரும் படத்தில் நடிக்க த்ரிஷா மறுத்துவிட்டார். இதையடுத்து தான் டாப்ஸியை ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருண் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் வாழ்த்துக்கள். ஜெய், இயக்குனர் திரு, டாப்ஸி, சுஷாந்த் பிரசாத்துக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷா

த்ரிஷா

திருமணம் நின்ற பிறகு வந்த பிறந்தநாளை த்ரிஷா தனது தோழிகளுடன் ஜாலியாக கொண்டாடியுள்ளார். தற்போது அவரை தேடி கூடுதலாக பட வாய்ப்புகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Trisha' former fiancee Varun Manian tweeted that, 'My absolute fav song. And line from it "Unnakum keezha ullavar kodi ninainthu paarthu nimmadi naadu" #MayakkamaKalakamma'.
Please Wait while comments are loading...