30 ஆண்டுகளுக்குப்பிறகு இணையும் இளையராஜா வசந்த் கூட்டணி!
சென்னை : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக இருக்கும் இயக்குனர் வசந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தை இயக்கி பல விருதுகளையும் வென்று வரும் நிலையில் விரைவில் திரையில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
மென்மையான காதல் கதைகளை இயக்கி அதில் வெற்றியும் கண்டு வரும் இயக்குனர் வசந்த்தின் கேளடி கண்மணி, ஆசை,நேருக்கு நேர், ரிதம் ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கேளடி கண்மணி திரைப்படத்திற்குப் பிறகு 30ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இளையராஜாவுடன் வசந்த் இணைய உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேளடி கண்மணி
மென்மையான காதல் கதைகளை வித்தியாசமான கோணங்களில் ரசிகர்களுக்கு தொடர்ந்து அளித்து வரும் இயக்குனர் வசந்த், இயக்குனர் பாலச்சந்தர் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கேளடி கண்மணி திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார்.

மிகப் பெரிய பலமாக
1990ல் வெளியான கேளடி கண்மணி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் விருதுகளையும் வென்று இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரிட் திரைப்படமாக கொண்டாடப்பட்டு வர இளையராஜாவின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்தது குறிப்பாக மண்ணில் இந்த காதல் இன்றி பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து அஜித், விஜய், சூர்யா என பிரபலமான நடிகர்களை இயக்கி சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வந்தார்.

மீண்டும் இணைய உள்ளார்
நீ பாதி நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு, ரிதம் என இவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படங்களும் ஒவ்வொரு விதமாக அனைவரையும் கொண்டாட வைத்து வந்தது. முதல்படமான கேளடி கண்மணி திரைப்படத்திற்கு பிறகு மற்ற திரைப்படங்களில் வேறு வேறு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்த நிலையில் இப்பொழுது மீண்டும் இளையராஜாவுடன் இணைய உள்ளார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் இயக்குனர் வசந்த் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்குப் பிறகு தான் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தை தானே சொந்த தயாரிப்பில் தயாரிக்க இருப்பதாகவும், இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு வசந்த் மற்றும் இளையராஜா ஒன்றாக இணைந்து பணியாற்ற உள்ள செய்தியை கேட்ட ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











