»   »  'கிங் ஆப் ஓப்பனிங்' என நிரூபித்த அஜித்.. வேதாளம் முன்பதிவு வசூல் மட்டுமே ரூ.20 கோடியாம்!

'கிங் ஆப் ஓப்பனிங்' என நிரூபித்த அஜித்.. வேதாளம் முன்பதிவு வசூல் மட்டுமே ரூ.20 கோடியாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிங் ஆப் ஓப்பனிங் என்று வர்ணிக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து நாளை வெளியாக உள்ள வேதாளம் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் மட்டும் ரூ.20 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், தீபாவளியையொட்டி, நாளை வெளியாகிறது வேதாளம்.


தமிழகத்தில் வேதாளம், 520க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், பிற மாநிலங்கள், பிற நாடுகளில் சுமார் 450 திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.


ஆயிரம் தியேட்டர்

ஆயிரம் தியேட்டர்

படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, தியேட்டர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆரம்பம் படத்திற்கு பிறகு, அஜித்தின் சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும், வெற்றி பெற்றுள்ளதால் வேதாளத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.


வெற்றி நம்பிக்கை

வெற்றி நம்பிக்கை

முந்தைய, என்னை அறிந்தால் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதற்கு அந்த படம் ஏ சென்டரில் மட்டும் ரீச் ஆனது காரணமாக கூறப்பட்டது. ஆனால், சிறுத்தை சிவா அனைத்து சென்டர் மக்களையும் ஈர்க்கும் இயக்குநர் என்பதால், படம் மெகா, வெற்றி பெறுவது கேரண்டி என்ற நம்பிக்கை வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு உள்ளது. இதன் காரணமாக படத்திற்கான முன்பதிவு, எதிர்பார்க்காததைவிட அதிகமாக நடைபெற்றுவருகிறது.


முன்பதிவு

முன்பதிவு

சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் மட்டுமின்றி, பெங்களூர் போன்ற வெளிமாநில திரையரங்குகளிலும் முன்பதிவு நடந்துவருகிறது. இந்த முன்பதிவு மூலம் கிடைத்துள்ள வசூல் மட்டும் ரூ.20 கோடி என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.


ஒப்பனிங் ராஜா

ஒப்பனிங் ராஜா

அஜித் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுவார். அஜித் நடிக்கும் திரைப்படங்கள் எப்போதுமே முதல் இரு நாட்களில் வசூலை வாரி குவிக்கும் என்பதால் அவருக்கு இந்த பெயர் இன்டஸ்ட்ரியில் செல்லமாக அமைந்துவிட்டது. திரைப்படம் நன்றாக இருந்தால், அந்த வசூல் வேட்டை தொடரும்.


English summary
The early prediction coming out from the trade reports say that "Vedalam" will easily make Rs 20 crore if the advance booking is taken into consideration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil