»   »  வியக்க வைக்கும் “வேதாளம்” - 2 நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி வசூலாமே!

வியக்க வைக்கும் “வேதாளம்” - 2 நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி வசூலாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த வேதாளம் திரைப்படம் 2 நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கைப்பற்றியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் நவம்பர் 10 ஆம் தேதி வேதாளம் வெளியானது.


தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் பண்ணாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.


தீபாவளி வசூல்:

தீபாவளி வசூல்:

தீபாவளியன்று வெளியாகி வேதாளம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 15.5 கோடியை வசூலித்துள்ளது. முதல் நாள் வசூலில் இது ஒரு புது சாதனை என்று சினிமா வட்டாரம் குதூகலித்துள்ளது.


2 நாளில் 25 கோடி வசூல்:

2 நாளில் 25 கோடி வசூல்:

பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவர அடிப்படையில் 2 நாள் அன்று நல்ல மழையாக இருந்த போதிலும் வேதாளம் நல்ல வசூல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவிலும் சூப்பர்:

அமெரிக்காவிலும் சூப்பர்:

அஜித்தின் வேதாளம் 2 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 25 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவிலும் இத்திரைப்படம் வசூலைக் குவித்து வருகின்றதாம்.


கொஞ்ச நாள் ஓய்வு:

கொஞ்ச நாள் ஓய்வு:

இந்நிலையில், நவம்பர் 26 ஆம் தேதி காலில் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார் அஜித். அறுவை சிகிச்சைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சென்னையில் ஒய்வு எடுத்துவிட்டு, பிறகு லண்டன் செல்லவிருக்கிறார்.


English summary
Vedalam (Vedhalam) has amassed a whopping 25 Crore rupees in Tamil Nadu alone from the first two days of its release. After crossing 15 Crores on its opening day, the Thala Ajith starrer has collected more than 9.6 Crores on its second day (Wednesday) at the box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil