»   »  அஜித்தின் அதிரடி ஆட்டத்தோடு வெளியானது வீர விநாயகா பாடல் டீசர்!

அஜித்தின் அதிரடி ஆட்டத்தோடு வெளியானது வீர விநாயகா பாடல் டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'வீர விநாயகா' பாடலின் டீசர் வெளியானது. மொத்தம் 17 விநாடிகள் கொண்ட இந்த டீசரில், பிரமாண்ட விநாயகர் சிலை முன்பு அஜித் ஆட்டம்போடுவது போல காட்சி உள்ளது. லட்சுமி மேனனும் அதில் ஆடுகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேதாளம்'. அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

லட்சுமி மேனன், அஸ்வின் கக்குமனு, தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.

படத்தின் டீசர் யூடியூப்பில் பெரும் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஆலுமா டோலுமா என்று தொடங்கும் பாடல் டீசர் வெளியிடப்பட்டது. நேற்றிரவு 12 மணிக்கு 'வீர விநாயகா' பாடலின் டீசர் வெளியானது. மொத்தம் 17 விநாடிகள் கொண்ட இந்த டீசரில், பிரமாண்ட விநாயகர் சிலை முன்பு அஜித் ஆட்டம்போடுவது போல காட்சி உள்ளது. லட்சுமி மேனனும் அதில் ஆடுகிறார்.

மும்பையின் பிரமாண்ட விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கண்முன் கொண்டுவரும் வகையில் டீசர் அமைந்துள்ளது. டீசர் வெளியான 11 மணி நேரத்திற்குள் இந்த வீடியோவை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்திருந்தனர்.

    English summary
    Veera Vinayaka Song Teaser from the Ajith Kumar stared Vedalam movie released.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil