நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அடுத்த அவதாரம்… சிங்கமாக கர்ஜிக்கும் வீர சிம்ஹா ரெட்டி டைட்டில் போஸ்டர்
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 107வது படத்தில் நடித்து வருகிறார்.
பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார்.
இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் NBK 107 பட டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

பஞ்ச் பாலையாகாரு
டோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படும் பாலகிருஷ்ணா, தற்போது தனது 107வது படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் கமிட் ஆகியுள்ளார். கமர்சியல் படங்களுக்கான டைரக்டர் கோபிசந்த் மலினேனி இந்தப் படத்தை இயக்குவதால், தாறுமாறாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுவும் பாலையா காருவின் ஆக்சனுக்கு பஞ்சமிருக்காது எனக் கூறப்படுகிறது.

டைட்டில் போஸ்டர்
NBK 107 என்ற டைட்டிலில் ஷூட்டிங் போய்கொண்டிருந்த இந்தப் படம், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், NBK 107 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக படக்குழு கொடுத்துள்ள இந்த அப்டேட் பாலையாவின் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அதன்படி இந்தப் படத்துக்கு 'விர சிம்ஹா ரெட்டி' என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. மேலும், அதற்கான மோஷன் போஸ்டரும் வெளியாகி மரண மாஸ் காட்டியுள்ளது.

சிங்கமாக கர்ஜிக்கும் பாலையா
இந்த டைட்டில் டீசர், கர்னூல் கோட்டையில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் வைத்து 3டி டெக்னாலஜியில் வெளியிடப்பட்டது. இந்த டைட்டில் டீசரில் புழுதி பறக்க வரிசையாக வரும் கார்களுக்கு முன்னால், கறுப்பு சட்டை வேஷ்டியில் ஒத்தையாக கம்பீரமாக நிற்கிறார் பாலையா. மேலும், தமனின் பின்னணி இசையும் செம்ம மாஸாக தெறிக்க விடுகிறது. பாலையாவின் படங்களின் டைட்ட்லில் 'சிம்ஹா' என இருந்தால், அந்தப் படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும். அதனால், இந்தப் படத்திற்கும் 'வீர சிம்ஹா ரெட்டி' என டைட்டில் வைத்து ஹைப்பை கூட்டியுள்ளது படக்குழு.

பொங்கலுக்கு ரிலீஸ்
வீர சிம்ஹா ரெட்டி டைட்டில் டீசருடன், படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதையும் படக்குழு உறுதி செய்துள்ளது. கடந்தாண்டு பாலையா நடிப்பில் வெளியான 'அகண்டா' படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பிய இந்தப் படத்துக்கு திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில், வீர சிம்ஹா ரெட்டி, 'அகண்டா' படத்துக்கே டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











