»   »  வீரையன்... 90 களின் பின்னணி, தஞ்சை மண்வாசனையுடன் வரும் படம்!

வீரையன்... 90 களின் பின்னணி, தஞ்சை மண்வாசனையுடன் வரும் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை மண்ணானது கால ஓட்டத்தில் தடம் புரண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதனை 1990 காலகட்டத்தை பின்புலமாகக் கொண்டு ஒரு படம் உருவாகிறது.

Veerayan, a movie on Tanjore village life

வீரையன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கதை தந்தை - மகன் பாசத்தை மைய இழையாக வைத்து தயாராகி வருகிறது.

Veerayan, a movie on Tanjore village life

தகப்பன் மற்றும் மகன், மகனுடன் வெட்டியாக சுற்றிதிரியும் நண்பர்கள் என நகரும் இந்தக் கதையில், தனது மகன் மேல் தகப்பன் வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையினை மகன் போராடி ஜெயிக்கிறானா என்பதே திரைக்கதையாகும்.

மேலும் தஞ்சை மக்களின் நம்பிக்கை மற்றும் மரியாதை மிக்க வாழ்க்கை முறையை பறைசாற்றும் படமாகவும் இது இருக்கும்.

Veerayan, a movie on Tanjore village life

இப்படத்தில் கதையின் நாயகனாக இனிகோ பிரபாகர் மற்றும் நாயகியாக ஷைனி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் கயல் வின்செண்ட், தென்னவன், எழுத்தாளர் வேலராமமூர்த்தி, ஆரண்ய காண்டம் வசந்த், விஜய் டிவி ஹேமா மற்றும் புதுமுகமாக திருநங்கை பிரீத்திஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் இயக்குநர் பரித் எழுத்தாளர் கலைமாமணி கலைமணி அவர்களிடம் உதவியாளராகவும், கதிர்வேல் படத்தின் இணை இயக்குனராகவும் களவாணி படத்தின் நிர்வாக தயாரிப்பளாரகவும் பணிபுரிந்துள்ளார்.

Veerayan, a movie on Tanjore village life

இசை : சண்டி வீரன் எஸ் என் அருணகிரி.

வீரையன் என்பது 1992-ல் ரஜினியை வைத்து எடுக்கவிருந்த ஒரு படத்துக்கு சூட்டப்பட்ட தலைப்பு. ரஜினி ரசிகன் இதழில் தொடராக இதன் திரைக்கதை வெளியானது. ஆனால் ஏதோ காரணத்தால் படம் கைவிடப்பட்டது.

English summary
Veerayan is another movie based on agriculture and village life which directed by debutante S Farid.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil